நாம் ஒவ்வொருவருமே அந்நாளின் ஃபாரெக்ஸ் பேபி தானே? அப்போது போட்டோ ஸ்டுடியோக்களில் குழந்தைகளை ஃபாரெக்ஸ் பேபி போல படமெடுங்கள் என கொண்டு விட்டு படமெடுத்து சட்டமிட்டு வீட்டு சுவற்றில் மாட்டிருப்பார்கள்.
Refill pack (Air sealed) தமிழ்நாட்டில் அறிமுகமாகி 46 வருடங்களாகிறது,
1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்கியில் வெளியான ஃபாரெக்ஸ் விளம்பரம் இது, அது நாள் வரை டின்னில் வந்தது நவீன ரீஃபில் பேக்கில் 50 பைசா விலை குறைவாக அறிமுகமாகையில் மக்களின் தயக்கம் போக்க இந்த திட உணவு மாவை எப்படி வேறு கொள்கலனில் கொட்டி இறுக்க மூடி வைக்க வேண்டும் என்ற அதி முக்கிய குறிப்பு பாருங்கள்.
"ஃபாரெக்ஸ் இன்று
புத்தம் புதுவித ரிஃபில் பெட்டியினுள் வருகிறது.-- சாவதேச பேக்கிங் தொழில்நுட்பத்திலே அதி நூதனமான முறை இது.
சுகாதார பாதுகாப்பு அதிகம்"
இன்று வணிக சந்தையில் டின்கள் வழக்கொழிந்து கண்ணாடி பாட்டில்கள் வழக்கொழிந்து reusable plastic container வழக்கில் உள்ளன, காற்றுபுகாத refill pack வாங்குவதே இன்றும் சிக்கனமானது.