இது பேராசை தான் என்றாலும் தமிழகத்தில் இந்த கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் , தமிழகத்தில் அரசு வேலைகளுக்கு சேர பல லட்சங்கள் லஞ்சம் தர தயாராக இருக்கின்றனர் சிலர்,
பலர் நம்பிக்கையுடன் அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கு கடுமையாக ஆண்டுக்கணக்கில் படித்து தயாராகி தேர்வு எழுதுகின்றனர், வேலைவாய்ப்புக்கு பதிந்து விட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர், இப்படியானோரின் கடும் உழைப்பும் காத்திருப்பு கால தகுதி மூப்பும் பறிபோகக்கூடாது.
படிப்பில் மந்தமானவர்கள் கடுமையாக உழைத்து ஜெயிக்கவோ தோற்கவோ வேண்டுமே தவிர குறுக்கு வழியில் தகுதியானவர் வேலையை லஞ்சம் தந்து பறிக்க காரணமாகக் கூடாது.
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் யாரேனும் முறைகேடு செய்தால் ஆயுள் தண்டனையும் கடும் அபராதமும் விதிக்க வழிவகை செய்ய வேண்டும்.