1.உங்கள் படுக்கையறையில் கண்ணாடிகள்.
கண்ணாடிகள் ஒரு நீரின் அங்கம் என்பதை நினைவில் கொள்வோம். இரவில் படுக்கை அறையில் உறங்குகையில் நாம் அதைப் பிரதிபலிக்கிறோம் ,
நீரின் ஆற்றல் நமக்கு தலைவலி தரும் அல்லது சோர்வாக எழுந்திருக்க வைக்கும்.
எனவே படுக்கை அறையின் குளியலறைக்குள் கண்ணாடி வைத்திருப்பது சிறந்தது, குளியலறையை விட்டு வெளியேறும்போது நாம் எப்போதும் கதவை மூடி வைக்க வேண்டும்.
படுக்கையறையில் உள்ள தொலைக்காட்சி அணைக்கப்படும் போது ஒரு கண்ணாடியாகவே செயல்படுகிறது. ஒவ்வொரு இரவும் தொலைக்காட்சி பயன்படுத்துவதை நிறுத்தும்போது அதை திரை கொண்டு மூடி வைப்பது ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும் தீர்வாகும்.
2.படுக்கையறையில் மீன் தொட்டி.
உதாரணமாக, மீன் தொட்டிகள், கண்ணாடி குப்பிகளில் நீர் தாவரங்கள் இவை எதுவும் படுக்கை அறையில் அமைப்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. வாசனை திரவியங்கள் அல்லது கொலோன்கள் கொண்ட குப்பிகள் அல்லது அருவி, கடல் தோன்றும் ஓவியங்கள் , படங்கள் கூட படுக்கையின் அருகே காட்சிப்படுத்துவதற்கு ஃபெங் ஷூய் பரிந்துரைப்பதில்லை. ஏனென்றால், நீர் அங்கம் (water element ) உறங்குபவர்களின் உடலில் உள்ள திரவங்களை வற்றச் செய்து, உயிர்ச்சக்தியை மறையச்செய்து விடும், எனவே படுக்கை அறையில் அமையும் அலமாரி கதவுகள் கூட கண்ணாடியால் அமைப்பதை ஃபெங்ஷூய் பரிந்துரைப்பதில்லை.
3.வேலை செய்யாத கடிகாரங்கள்
சுவர் கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள் என எந்த வகை கடிகாரமும் பேட்டரி தீர்ந்து நின்றாலோ பயன்படுத்தாமல் நின்றாலோ உடனே அதை இயங்கச் செய்து துல்லியமாக மணி காட்டச் செய்து காட்சிப்படுத்த வேண்டும், இயங்கும் கடிகாரம் செயலை குறிக்கிறது, ஆற்றல் பாய்வதை குறிக்கிறது. கடிகாரம் நின்றுவிட்டால், நேர்மறை ஆற்றலும் அறையில் தேங்கி நிற்கிறது.
4.வெறுப்பை வெளிப்படுத்தும் விலங்குகளின் படங்கள்,
மூர்க்கமான ஓவியங்கள்
சுவற்றில் காட்சிப்படுத்துவதை ஃபெங் ஷூய் பரிந்துரைப்பதில்லை, ஓவியம் அல்லது புகைப்படத்தில் தோன்றும் விலங்கு ஆக்ரோஷமான வெளிப்பாட்டைக் கொண்டிருந்தால், அதன் கோபத்தைக் காட்டுமானால், அதை சுவற்றில் மாட்டாமல் இருப்பதே நல்லது. படங்களில் இருந்து வெளிப்படும் எதிர்மறை ஆற்றல் அறைகளுக்குள் ஊடுருவிச் செல்லும், வசிப்பவரின் நேர்மறை சிந்தையை குலைக்கும்.
5.கூர்மையான பொருள்கள்,
அலமாரி தட்டுகளின் கூர்மையான முனைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
முனை வளைந்த அல்லது ஓவல் வடிவம் கொண்ட மரச்சாமான்களை அறைகளில் வைத்திருப்பது சாலச் சிறந்தது, கூடுமானவரை ப்ளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் இரும்பு நாற்காலிகள் அலமாரிகளை தவிர்த்து மரசாமான்கள் , கண்ணாடி தட்டுகள் அமைக்கப்பட்டதை அறைக்குள் பயன்படுத்த நல்லது. சாப்பாட்டு அறையில் சதுரம் அல்லது செவ்வக வடிவ மேஜை இருந்தால், அதை ஒரு மேஜைவிரிப்பு கொண்டு மூடுவது சிறந்தது. இந்த வழியில் விஷ அம்புகள் (poison arrows) எனப்படும் எதிர்மறை ஆற்றல் நமது உடற் சக்கரங்களை துளைப்பதை தவிர்க்க முடியும்.
இந்த ஐந்து கூடாதவைகள் ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும் அடிப்படை ஆற்றல் இணக்கத்தை சீர்குலைக்கின்றன. எனவே, அவற்றை வீட்டிற்குள் தவிர்ப்பது நல்லது.
Chinese Vastu Shastra
According to Feng Shui, these are 5 things you should never have in your home.
1. Mirrors in your bedroom.
Let's remember that glasses are a component of water. As we sleep in the bedroom at night, we reflect on it.
The energy of water can give us headaches or wake us up tired.
So it is better to have a mirror inside the bedroom bathroom and we should always close the door when leaving the bathroom.
The television in the bedroom acts as a mirror when turned off. A feng shui solution is to cover the TV with a screen every night when you stop using it.
2. Fish tank in the bedroom.
For example, fish tanks, water plants in glass bottles are not recommended for setting up in the bedroom. Feng shui does not recommend displaying bottles of perfume or cologne, or paintings or pictures of waterfalls or oceans near the bed. Because water element (water element) dries up the fluids in the sleeper's body and makes the vitality disappear, so feng shui does not recommend that even the wardrobe doors in the bedroom are made of glass.
3.Clocks that don't work
Wall clocks, wristwatches, any type of clock, when the battery runs out or is not used, it should be turned on immediately and displayed accurately, a running clock represents action, energy flows. When the clock stops, positive energy also stagnates in the room.
4. Images of animals that express disgust,
Fierce paintings
Feng Shui does not recommend displaying on the wall, if the animal in the painting or photograph has an aggressive expression and shows its anger, it is better not to hang it on the wall. The negative energy emanating from the images permeates the rooms, disrupting the positive thinking of the occupant.
5. Sharp objects,
Sharp edges of shelf plates should be avoided.
It is best to keep curved or oval-shaped furniture in the rooms, as far as possible plastic chairs and iron chairs, except for the shelves, it is better to use the furniture and glass plates in the room. If the dining room has a square or rectangular table, it is best to cover it with a tablecloth. In this way we can avoid the negative energy called poison arrows from piercing our body chakras.
These five don'ts disrupt the basic energy harmony that feng shui recommends. Hence, it is better to avoid them indoors.
#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3