15. பௌர்ணமி : பௌர்ணமி திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளில் பௌர்ணமி முக்கியமானது, ஆடிப் பௌர்ணமி, சித்திரா பௌர்ணமி, ஐப்பசி பௌர்ணமி போன்றவை ஆண்டின் முக்கியமான பௌர்ணமி தினங்களாகும்.
உயிர்ப்பு ஆற்றல் கிடைக்ககூடிய நாள் பௌர்ணமி தினம். பௌர்ணமி அன்று சந்திரனின் ஆற்றல் பல மடங்கு இருக்கும். சந்திரன் மனோகாரகன் ஆவார். அதாவது நமது மனதை ஆள்பவர். இந்நாளில் மனிதர்களின் கோபம் பன்மடங்காகிறது, மனநலம் பாதிக்கபட்டு பல குற்றங்கள், மற்றும் தவறுகள் நிகழ்கிறது, இதைத் தவிர்க்க தான் இறை நினைப்போடு பௌர்ணமி தினங்களில் கடற்கரை தியானம், மலைக்கோயில் கிரிவலம் செய்வது மிகுந்த பலனளிக்கும்.
பௌர்ணமி திதி என்பது மத்யமான சுபபலன் கொண்ட திதி. இந்நாளில் தாலி கயிற்றை மாற்றலாம்,ஹோமங்கள் செய்யலாம், ஹோமங்களில் கலந்து கொள்ளலாம்,பாராயணம் செய்யலாம்.
பௌர்ணமி அன்று புதிய பொருட்களை வாங்குவது, புதிய செயல்களில் ஈடுபடுவது, விற்பது போன்றவற்றை செய்யகூடாது. கிரகபிரவேசம் செய்யகூடாது, மொட்டை அடிக்ககூடாது, வளைகாப்பு செய்யகூடாது, வரன் பார்க்கச் செல்லகூடாது,
பௌர்ணமி திதிக்கான அதி தெய்வங்கள் : சிவன், மற்றும் பராசக்தி ஆவார்கள்.