தினமும் எப்பாடுபட்டாவது 10000 காலடிகள் நடந்துவிடுகிறேன் , காலை 8-30 முதல் 10-00 என்பதால் நல்ல வெயில் வந்துவிடுகிறது, வேகமாக நடப்பதால் கடும் வியர்வையில் சளி பிடித்தது அது குணமாகி வறட்டு இருமல் மட்டும் இருந்தது,மூச்சு இளைக்க தொடங்கியது, ஆனால் மணம் நன்கு உணரமுடிந்தது.
இம்முறை நான் குடிக்கும் cough syrup கைவிட்டது ,இந்த சித்தரத்தையை என் அம்மா சிறு வயதில் இருமலுக்கு வாயில் ஊற வைக்கத் தருவார்,என் மனைவி இதை முயன்று பாருங்கள் என ஒரு சிறு துண்டு தந்தார், அது சக்கையாகும் வரை வாயில் ஊற வைத்து மாற்றிக் கொண்டே இருந்தேன், இருமல் போயே விட்டது, கண்டிப்பாக இது நல்ல அருமருந்து, இதை பலகாலம் மறந்து போனது தான் துயரம்.
இருமலுக்கு cough syrup குடிக்கும் முன் சித்தரத்தையை வாயில் ஊற வைத்து பாருங்கள் ,நல்ல பலன் தெரியும்.
#சித்தரத்தை,#வறட்டு_இருமல்,#மூச்சு_இளைப்பு,#பத்தாயிரம்_காலடி