François Truffaut இயக்கிய Fahrenheit 451 படத்தில் நாம் பார்த்த SAFEGE என்னும் மோனோ ரயிலின் படம் தான் இது,ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம் எப்படி நம்பும்படியான செட்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கான முக்கிய உதாரணம் இப்படம் ,50 வருடங்கள் கடந்தும் நம் மனதில் நீங்காமல் இருக்கும் இந்த மோனோரெயிலும்,படத்தில் வரும் தீயணைப்பு இஞ்சினும் அதன் பணியாளர்களும் என மிக அருமையான படம்,
Fahrenheit 451 என்பது புத்தகம் நன்கு எரியத் தேவைப்படும் வெப்ப அளவு,புத்தகங்களை எதிரியாகக் கருதி காணும் புத்தகத்தையெல்லாம் எரிக்கும் புரட்சிக்காலத்தில் நடக்கும் கதையை இப்படத்தைவிட நன்றாக யாராலும் காட்சிப்படுத்த முடியாது,
இந்த மோனோரயிலுக்கு 1959 ஆம் வருடம் பாரீஸில் அப்போது 1.4 கிமீ தூரத்துக்கே டெஸ்ட் ட்ராக் போடப்பட்டது,பின்னாளில் இது வழக்கொழிந்தும் போய்விட்டது,ஆனாலும் அது படத்தில் ஏற்படுத்திய பாதிப்பு இணையில்லாதது,
தலைகீழாக வவ்வால் போல மேலே இருக்கும் பீம்களில் வேயப்பட்ட ட்ராக்குகளில் தொற்றிக்கொண்டு செல்லும் இந்த மோனோ ரயில்,ஸ்டேஷன் வந்த உடன் ரயில் பெட்டியின் தரையில் இருக்கும் கதவு வெளிப்புறம் திறக்க,ஒரு ஏணியும் தரைக்கு இறங்க,அதிலிருந்து பயணிகள் வெளியே வரும் காட்சி,இன்னும் 50 வருடங்கள் கடந்தாலும் மிகுந்த தொலைநோக்காகவும், புதுமையாகவும் இருக்கும் என்பதில் ஐயமேயில்லை.
http://en.wikipedia.org/wiki/SAFEGE