உங்கள் வீட்டில் வயதான பெரியவர்கள் இருந்தாலோ?, Indian water closet உபயோகித்து பழகியவர்கள் இருந்தாலோ?, european water closet உபயோகித்து பழகியவர்கள் இருந்தாலோ?கட்டப்போகும் வீட்டின் toilet ல் என்ன விதமான water closet அமைப்பது என்ற குழப்பம் கண்டிப்பாக இருக்கும்,
அந்த சூழலில் இது போல anglo - Indian water closet பொருத்தி விடுவது மிகவும் சௌகர்யமானது.
இது 4500 ரூபாய் முதல் கிடைக்கிறது, 135 கிலோ எடை வரை தாங்கக் கூடியது, தொந்தி உள்ளவர்கள், கால்நடுக்கம் உள்ளவர்கள், மூட்டு தேய்மானம் உள்ளவர்கள், தரையில் முட்டி போட்டு அமர்ந்து உபயோகிப்பதை விட இது சுலபமானது, சிறிது பழக வேண்டும், பக்கத்து சுவற்றில் grab bar வைத்து விட்டால் நல்லது.கூடவே இது போல படத்தில் உள்ளது போல ஒரு ஸ்டுல் செய்தோ ,வாங்கியோ வைத்தால் இன்னும் வசதி, பெரியவர்கள் toiletல் வழுக்கி விழாமல் இருக்க நாம் எத்தனை செலவு செய்தாலும் தகும்.
இதை ஆங்கிலோ இந்தியர்கள் உபயோகித்ததால் இந்த பெயர் வரவில்லை, ஆங்கிலேய மற்றும் இந்திய பாணியில் இதை பயன்படுத்த முடிவதால் இந்தப் பெயர்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
#anglo_Indian_closet,#ஆங்கிலோ_இந்தியன்_கோப்பை,#toilet,#wc,#commode