நீங்கள் வாங்கும் அடுக்ககத்திற்கு எப்படி Invoice Bill கணக்கிடப்படுகிறது என்று பாருங்கள்.
நீங்கள் ஒரு அடுக்ககம் வாங்கப்போனால் எப்படி உங்கள் தலையில் மிளகாய் அரைக்கின்றனர் என்று பொறுமையாக படியுங்கள்.
நீங்கள் கிராம் கணக்கில் வாங்கும் தங்க நகைக்கும் சதுரடி கணக்கில் வாங்கும் அடுக்ககத்திற்கும் அதன் Invoice பில் தொகையில் நிறைய ஒற்றுமை உள்ளது.
இது பெருங்களத்தூர் GST road ல் உருவாகி வரும் அடுக்குமாடி குடியிருப்பு.
இந்த Invoice பில் 2.5 BHK (அதாவது 2 படுக்கை அறை + 1 study ) அடுக்ககத்திற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரியில் விளம்பரம் செய்யப்பட்ட விலை = 4995₹/ சதுரடிக்கு
நீங்கள் அந்த builder ன் booking office ற்கு போனவுடன் அது 5205 ₹ / சதுரடி ஆகிவிடுகிறது
ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்தது 4 ஆம் மாடியாம், (எனவே கட்டுமான பொருட்களை lift செய்ய வேண்டி கூடுதலாக 210₹ / சதுரடி உங்களிடம் பெறப்படுகிறது)(மாடி மேலே போக போக இந்த தொகை கூடும்)
சரி உங்கள் அடுக்கத்தின் கார்பெட் ஏரியா(அதாவது சுவர்கள் சேர்க்காத தரைதளப் பரப்பு) 1038.5 சதுரடி
உங்கள் super built up area 1455 சதுரடி (சுவர் பரப்புக்கு இந்த 416.5 சதுரடியாம் (4 சதுரம்,~ 1 cent), இந்த 416.5 சதுரடிக்கு 1 bhk flat வரும் என்று படிக்காதவர்களுக்கு கூட தெரியும்)
சரி இப்போது பெருக்கல் கணக்கு
1,455×5,205. =7573275
கார் பார்க்கிங் = 225000
மொத்தம் =7798275
இதற்கு 5% ஜிஎஸ்டி வரி =389914
ஆக மொத்தம் = ₹8188189
இத்துடன் முடியவில்லை
க்ளப் ஹவுஸ் கட்டணம். (நீச்சல்குளம், jogging track, playground) = ₹100000
development fees (திட்ட அனுமதி தொகை) 54/ சதுரடி = ₹78570
sewage plant,diesel genset,etc =144/சதுரடி = ₹209520
இவை எல்லாம் சேர்த்தால் = ₹545230
இத்துடன் மேலே உள்ள தொகை ஜிஎஸ்டி நீங்கலாக கூட்டினால் = ₹8343505
இத்துடன் முடியவில்லை
ஒப்பந்த தொகை ₹8343505 க்கு 5 % ஜிஎஸ்டி வரி = ₹417175
ஆக மொத்த தொகை = ₹8760680
இத்துடன் முடியவில்லை
இதற்கு legal fee = ₹29500
corpus fund (அதாவது முறைவாசல் கட்டணம்) = ₹75000
maintainance charges (அதாவது மற்றொரு முறைவாசல் கட்டணம்) = 36/ சதுரடி = ₹61808
மொத்த கட்டணம் = ₹166308
இந்த மொத்த கட்டணத்தை அந்த மொத்த கட்டணத்துடன் கூட்டினால் வரும் தொகை = ₹8926989
ஆக மொத்தம் எண்பத்தொன்பது லட்சத்து இருபதாயிரத்து தொள்ளாயிரத்து என்பத்தொன்பது ரூபாய் மட்டுமே
இப்போது நீங்கள் தரும் அதிக விலையை கணக்கிடுவோம்
₹8926989 ÷ 1455= 6135 ₹
விளம்பரம் செய்யப்பட்ட விலை ₹ 4995 ஐ இதில் கழித்தால் 1140₹ வருகிறது
இவர்கள் செய்த வெட்டி விளம்பரச் செலவினங்களுக்கு உங்கள் கணக்கில் இருந்து ஒரு சதுரடிக்கு 1140₹ திருடப்படுகிறது.
தவிர super built up area என்ற வகையில் சுமார் 300 சதுரடி அதிகம் வைத்து கணக்கிட்டுள்ளனர், நியாயமாகப் பார்த்தால் ஆயிரம் சதுரடி carpet area அடுக்ககத்துக்கு 10 சதம் சுவர் பரப்பு வரலாம் = 1100,
அத்துடன் 10 சதம் common area வந்தால் 110 சதுரடி = ஆக மொத்தம் 1210 சதுரடி அதிக பட்சம் வரலாம், ஆனால் இவர்கள் 1455 சதுரடி புரட்டு கணக்கு காட்டுகின்றனர்.
ஆக உங்கள் பணத்தை 360° சுற்றுபோட்டு திருடுகின்றனர்.
காதுள்ளவன் கேட்கக்கடவன்,உங்கள் பாடுபட்ட பணத்தை இப்படி பேராசை கொண்ட கட்டுமானர்கள் கட்டும் அடுக்ககங்களில் கொண்டு போய் முடக்கும் முன் நன்கு யோசியுங்கள்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#அடுக்ககம்