ராஜாத்தி ரோஜாக்கிளி (1985) மறக்கப்பட்ட அமானுஷ்ய சினிமா


ராஜாத்தி ரோஜாக்கிளி (1985) இந்த படம் தேடிப் பார்க்க முக்கிய காரணம் அன்று 80 களில் வானொலியில் ஒலிபரப்பான " காஞ்சிபுரம் ஜரிகபட்டு வாங்கித்தாரேன் " பாடல் ,  ஓடையின்னா நல்ல ஓடை ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை போன்ற பாடல்கள் தான், சந்திரபோஸ் இசையில் மலேசியா வாசுதேவன்,யேசுதாஸ் ,  பாடிய இனிமையான மெல்லிசைப்பாடல்கள் என்றும் மறக்க முடியாதவை .

நேற்று படம் பார்க்கையில் ரோலிங் டைட்டிலில்  மாயாஜால காட்சிகள் இன்னார் என்று பெயர் வருகையில் தான் இது அமானுஷ்ய திரைப்படம் என்றே தெரியும், படம் பார்க்க பார்க்க எண்ணிலடங்கா ஆச்சர்யங்கள்.

படம் முழுக்க கம்பம் பள்ளத்தாக்கை சுற்றி அமைந்த எழில் கொஞ்சும் ஊர்களில் படமாக்கியிருந்தனர், பெரியாறு ப்ராஜக்ட்,கம்பம் ரேஞ்ச், சுருளியாறு மின் நிலையம், கூடலூர்,கு.க.பட்டி,K.G.பட்டி,சுருளிபட்டி,KM பட்டி என நிறைய பட்டி தொட்டிகளை படத்தில் காணலாம்.

இதில் நடிகர் கவுண்டமணி தான் பிரதான வில்லன், ஆச்சி மனோரமா தான் வில்லி, படத்தில் அவர் பேய்க்கு பயந்து கணவன் கவுண்டமணி வாங்கி வைத்த  பிராந்தியை முழுக்க  ராவாக குடிக்கும் காட்சி கூட வருகிறது, செந்தில் கூட இதில் கெட்டவர் கவுண்டமணியின் கையாள் தான்.

அன்னக்கிளி தேவராஜ் மோகன் இரட்டையரில் S. தேவராஜ் இயக்கிய திரைப்படம் இது, இது ஊரில் நடந்த உண்மை சம்பவம் என்கிறார் படத்தின் துவக்கத்தில் தோன்றி பேசிய இயக்குனர்.

படத்தின் கதை:-

பணம் கிடைக்கிறது என்றால் எந்த கொலைபாதகமும் நயவஞ்சகமும் செய்யத் துணிபவர் கவுண்டமணி, இவரது மனைவி மனோரமாவும் கூட உடந்தையாக இருப்பவர், உடன் செந்தில் உட்பட சில அடிபொடிகள் கூட உண்டு, ஜோசியக்காரன் வீட்டுக்குள் புதையல் உண்டு என சொன்னதால் நடு வீட்டிற்குள் பத்தடி ஆழத்துக்கு குழி தோண்டி ஏமாறுகிறார் கவுண்டமணி.easy money செய்ய அத்தனை அலைகிறார்கள் இத்தம்பதிகள்.

மனோரமாவின் அண்ணன் அவ்வூர் பண்ணையார்,கொடைவள்ளல்,
மனைவியை இழந்தவர்,ஒற்றை மகன் , அவர் உடன் கணக்கு புத்தகத்தோடு வாய்க்கால் வரப்பெங்கும் உடன் அலைகிறார் மச்சான் கவுண்டமணி , தன் பங்குக்கு ஏகம் வாரிச் சுருட்டுகிறார், 

பண்ணையார் திடீரென நோய்வாய்பட்டு இறக்கிறார், இறக்கும் தருவாயில் தன் ஒரே மகன் சுருட்டையனை இவர்களை நம்பி ஒப்படைத்தவர், அவன் மேஜர் ஆனதும் சொத்துக்களை அவனிடம் தருமாறு கேட்கிறார், 

ஆனால் கவுண்டமணியும் மனோரமாவும் இந்த முழு சொத்தையும் ஏக வாரிசுபோல அனுபவிக்கின்றனர், 
 தன் ஒரே மகளை மட்டும் படிக்க அனுப்புகின்றனர்,  சுருட்டையனை அடி அடி என வாத்தியார் அமர்த்தி அடிக்க வைத்து படிப்பு மீதே வெறுப்பு வரச் செய்கின்றனர்,

சுருட்டையன் தேர்ந்த விவசாயியாக வளர்கிறார்,ராஜேஷ் தான் வளர்ந்த சுருட்டையன், நளினி அவரின் அத்தை மகள்,அவர் கல்லூரி படிப்பதால் படிக்காத சுருட்டையனை அறவே பிடிப்பதில்லை,மணக்க விரும்பவில்லை, இதனால் சொத்து எளிதாக வருவதாயில்லை, நளினி  உடன் பயிலும் சுரேஷை விரும்புகிறார், 

வீட்டில் சுருட்டையனை சம்பளம் வாங்காத வேலைக்காரன் போலவே நடத்துகின்றனர், சரிவர உணவு கூட வழங்குவதில்லை,சொந்த வீட்டில்  அகதி போல வாழுகிறார் சுருட்டையன், அத்தை மாமாவை எதிர்த்து பேச நினைக்கையில் உறவு முறை பார்த்து வெகுண்டு எழ மறக்கிறார்.

சுருட்டையன்  பக்கத்து வீட்டுப் பெண் சுலக்‌ஷனாவை விரும்புகிறார்,ஏழை பணக்காரன் வித்தியாசத்தால் திருமணத்துக்கு கவுண்டமணி எதிர்ப்பு காட்ட, அப்போது வெகுண்டவர் அரிவாளை மாமன் கவுண்டமணி கழுத்தில் வைத்து மிரட்டி திருமணத்துக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் கெடுபிடியாக வாங்குகிறார், 

கம்பம் சென்று ஜவுளி எடுத்து வருகிறேன் என  ஊராரிடமும் காதலி சுலக்‌ஷனாவிடம் சொல்லி விட்டுச் செல்கிறார், போகையில் தான் அந்த காஞ்சிபுரம் ஜரிகபட்டு பாடல் பாடுகிறார், பாடல் முடிவில் அவசரப்பட்டு திருமணத்துக்கு முன்பே காதலியுடன் கிணற்று மேட்டின் மறைவில் வைத்து உறவு கொண்டு விடுகிறார், இதை முறைப்பெண் நளினி ஒளிந்து பார்க்கிறார்.

சுருட்டையன் ஊர் தாண்டுகையில் இவரை வழிமறித்த கவுண்டமணி செந்தில் மற்றும் இரண்டு அல்லக்கைகள் சுருட்டையனை தாக்கி கொன்று விடுகின்றனர், அல்லக்கைகள் இருவரை சுருட்டையனின் நாய் கடிக்கிறது, சுருட்டையன் சாகும் போது கவுண்டமணிக்கு சாகும் வரை நிம்மதி இருக்காது என  மண்ணை வாரி தூற்றி சாபம் தந்துவிட்டு சாகிறார்,

பிணத்தை சேறு உள்ள பாழும் கிணற்றில் தள்ளி விடுகின்றனர், செந்தில் பட்டு வேட்டி சட்டையை சுடுகாட்டில் புதைத்த வேறு பிணத்தை தோண்டி அணிவித்து ஆக்ரோஷமிகு சுருளி ஆற்றில் வீச, அழுகிய சடலம் போலீசுக்கு கிடைக்கிறது, கவுண்டமணி போலீஸாரை பணம் தந்து சரிகட்டுகிறார், சுலக்‌ஷனா காதலன் உடன் ஒருநாள் வாழ்ந்ததால் சுருட்டையன் இறந்த செய்தி தெரிந்ததும் வெள்ளை புடவை உடுத்தி வலம் வருகிறார், அவர் தந்தைக்கு அவமானம், இயக்குனர் கிருஷ்ணராஜ் அந்த ஊரில் விவசாயி,  சுருட்டையனின் நலம் விரும்பி ஆவார், அவரால் இந்த சின்னஞ்சிறுப்பெண் வெள்ளைபுடவை உடுத்தி விதவை ஆனதை சகிக்கவே முடியவில்லை, 

சில மாதங்கள் ஆக சுலக்‌ஷனா கருத்தரிக்கிறார், கிருஷ்ணராஜ் ஊராருடன் சென்று சுலக்‌ஷனாவை கவுண்டமணி வீட்டில் கொண்டு போய் மருமகள் வம்ச வாரிசை சுமப்பவள் என்று வாழ வைக்க பேசுகிறார், ஆனால் அவர்கள் மசிவதில்லை, இனி பராசக்தியே அவர்களுக்கு கூலி தரவேண்டும் என்று உறுதி கொண்டவர் காவி தரிக்கிறார்,உடம்பு முழுதும்  விபூதி, சந்தனம் குங்குமம் பூசியவர் நேராக போய் சுருளியாறு முத்துமாரி கோயிலில் அம்மனை குறுகுறுவென பார்த்தபடி தவம் இருக்கிறார்,சுமார் 48 நாட்கள் கழிகிறது, ஊண் உறக்கம்  விட்டு உள்ளம் குவித்து தாயை வேண்ட தாய் அருள் புரிகிறார், கிணற்று மேட்டில் இருந்து சுருட்டையனின் ஆவி மேலெழும்பி அதன் சித்து விளையாட்டை காட்டுகிறது,

சுருட்டையனின் நாயால் கடிபட்ட இரண்டு அல்லக்கைகள் நாய்போலவே குலைத்து எச்சில் வடித்து சாகின்றனர்.
 மனோரமாவை பட்டப்பகலில் சமையலறையில் நுழைந்த சுருட்டையனின் பேய் அறை அறைகிறது, கவுண்டமணி தூங்குகையில் கால்களை திருப்பி முறுக்கி விடுகிறது, 

நளினி காதலன் சுரேஷை மணமுடிக்க முதலிரவில் மாப்பிள்ளை சுரேஷை மாறி மாறி அறைகிறது, செந்திலை துரத்திப்போய் அதே பாழும் கிணற்றில் துரத்தி விழச்செய்து கொல்கிறது, நளினி சுரேஷ் ஊர் விட்டு தப்பிச் செல்லும் வில்வண்டியை சுருட்டையனின் பேய் ஓட்டிப் போய் கவிழ்த்து விட்டு எச்சரிக்க,அவர்கள் மீண்டும் வீட்டுக்கே வருகின்றனர், 

இப்போது அம்மன் கோயிலில் உண்ணா தவமிருந்த கிருஷ்ணராஜ் சுலக்‌ஷனா பால் வார்க்க , அம்மா நீ தான் பொறுப்பு என பாலை ஏற்காமல் உயிர்விடுகிறார்.

இப்போது நளினிக்குள் சுருட்டையனின் பேய் புகுந்து உக்கிரமாக ஆட்டுவிக்கிறது,  சுரேஷ், மனோரமா கவுண்டமணி மூவர்  ஊரின் புகழ்பெற்ற பூலாநந்தீஸ்வரர் கோயிலில் மனைவியை ஒரு நாள் இரவு முழுக்க விட்டு வர,நளினியை  பூசாரிகள் பலிபீடத்தில் உட்கார வைத்து கட்டுகின்றனர், நடுநிசியில் நளினி உடம்பு கடிகார முள் போல பலி பீடத்தின் அச்சில் சுற்றுகிறது, பேய் பிடித்த மகள் கத்துவதை சகிக்காமல் ஓடி வந்து பலிபீடத்தின் அருகே நின்று பார்த்தவர்களை சுருட்டையன் பேய் வெளியேறி இவர்கள் இருவரை அறைந்து காட்டுக்குள் துரத்திப் போய் மாறி மாறி அறைகிறது,சுரேஷ் வெளியே வராததால் தப்புகிறார் ,மனோரமா கவுண்டமணியை விடாமல் துரத்திப் போய் அதே பாழும் கிணற்றில் விழவைத்து சேற்றில் மூழ்கடித்து சாகடிக்கிறது,

மறுநாள் நளினி பலிபீடத்தில் அருகே கட்டாந்தரையில் கண்விழித்தவரை கணவர் சுரேஷ் தேற்றி அழைத்துபோகிறார், நளினி முற்றிலும் திருந்தியவர் , இந்த சுருட்டையன் சொத்து தனக்கு வேண்டாம் என்று கொத்துசாவி, பத்திரம் நகை நட்டு என அனைத்தையும் சுருட்டையனின் மனைவி சுலக்க்ஷனாவிடம் வலுக்கட்டாயமாக தந்துவிட்டு ஊரைவிட்டே போகையில் படம் நிறைகிறது.

அருந்ததி , காஞ்சனா போல ஒரு பொழுதுபோக்கு சித்திரம் ஆனால் படம் A சான்றிதழ் பெற்றதால் குழந்தைகள் பார்க்க ஏற்றதல்ல, சுரேஷின் கல்லூரி நண்பர்கள் சீட்டு விளையாடுகையில் அவர்கள் சீட்டு ஆட உபயோகிப்பது ந்யூட் மாடல் சீட்டுகள்,ஒளிப்பதிவாளர் சோமன் அதற்கு zoom போட்டுள்ளதை என்ன சொல்ல?, ராஜேஷ் மற்றும் சுலக்‌ஷனா காதல் காட்சிகள் இந்த A சான்றிதழை பெற்றுத் தந்து , படத்தை  வெகுஜன பார்வையாளர்களிடமிருந்து மறைத்துவிட்டது, ஒரு அமானுஷ்ய திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் குடும்பத்துடன் பார்க்குமாறு அமைந்திருத்தல் அவசியம், இப்படி வயது வந்தோருக்கு மட்டுமான படமாக அமைந்தால் படம் பெட்டிக்குள் சுருண்டுவிடும்.

இந்த A சான்றிதழ் பெற்ற படத்துக்கு கல்கி இதழில் பணிபுரிந்த ஜெயமன்மதன் என்பவர்  காதலை கண்ணியமாக காட்டிய படம் என்று பாராட்டி எழுதிய விமர்சனம் இணைப்பில் பாருங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)