"முதல் குரல்" திரைப்படம் ரோலிங் க்ரெடிட் பார்க்கையில் உறைந்து போய்விட்டேன், இது இசையமைப்பாளர் சந்திரபோஸ் இசை அமைத்த திரைப்படம், இது ஆகஸ்ட் 14 1992 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.
இதில் "திருடா திருடா" திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற பாடலான "புத்தம் புது பூமி வேண்டும்" பாடலின் flute prelude வருகிறது, இணைப்பில் கேட்கலாம்,
திருடா திருடா 1993 ஆம் ஆண்டு 13 நவம்பர் வெளியாகி உள்ளது .
அன்று பல இசை அமைப்பாளர்களுக்கு கீபோர்ட் வாசித்த இசைப்புயல் தன் சொந்த ட்யூனை சந்திரபோஸ் அவர்களுக்கு வழங்கி இருக்க வேண்டும், முதல் குரல் திரைப்படம் வெளியாக தாமதமாகியிருக்க வேண்டும், அந்த இடைவெளியில் ரோஜா வெளியாகி, திருடா திருடா வெளியாகி புகழின் உச்சிக்கு சென்றிருக்க வேண்டும் நம் இசைப்புயல்,
அப்படி தனது சொந்த ட்யூனை மீண்டும் திருடா திருடா திரைப்படத்துக்கு பயன்படுத்தியிருக்க வேண்டும் என எண்ணுகிறேன், காரணம் இந்த ரோலிங் க்ரெடிட்டில் இந்த prelude தான் நிமிர்ந்து உட்கார வைக்கிறது,அதன் பின் சாதாரண loop போலவே உள்ளது.
இதை முன்பு கவனித்தவர்கள் இந்த trivia பற்றி முன்பு தெரிந்தால் கருத்திடவும்.