அவர் எனக்கே சொந்தம் |1977 | இசைஞானி | இயக்குனர் பட்டு

அவர் எனக்கே சொந்தம் (1977) அற்புதமான திரைப்படம், இசைஞானியின் பரீட்சார்த்தமிகுந்த பின்னணி இசை மற்றும் அழகிய பாடல்களைக் கொண்டது.

நல்ல மனம் கொண்ட விளம்பர நிறுவனத்தின் முதலாளி ஆனந்தாக ஜெய்சங்கர், அவரின் possessiveness மிகுந்த  மனைவியாக ஸ்ரீவித்யா, அலுவலகத்தில் ஆறுமாதங்களாக பணியாற்றும் ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்த இளம் ஸ்டெனோக்ராஃபர் எலிஸபத்தாக படாபட் ஜெயலட்சுமி நடித்துள்ளனர்.

தயாரிப்பு , கதை வசனம் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.ஒளிப்பதிவு T.S.,விநாயகம், இயக்கம் பட்டு, இயக்குனர் பட்டு தமிழ் சினிமாவில் 1970 களில்  9 படங்கள் இயக்கி உள்ளார்,அவை.
பால்குடம்
கண்மலர்
தாய்க்கு ஒரு பிள்ளை
புகுந்த வீடு
பாச தீபம்
மஞ்சள் குங்குமம்
அம்மன் அருள்
காரோட்டி கண்ணன்
அவர் எனக்கே சொந்தம்

படத்தின் கதை:-
தொழில் நிமித்தம் தினம் தினம் எத்தனையோ மாடல்களை சந்தித்தாலும் மனைவியைத் தவிர யாரையும் மஞ்சத்தில் நினைக்காதவர் ஜெய்சங்கர், இதயத்துக்கு பதிலாக அங்கே அகராதி பொருத்தி அலையும் மனைவியாக ஸ்ரீவித்யா, சதா கணவனை சந்தேகிக்கிறார், அவர் நினைத்தது தான் சட்டம்  என்று உணவு உடை கேளிக்கை குழந்தைகள் வளர்ப்பு என அனைத்திலும் கண்டிப்பை கொட்டுகிறார் ஸ்ரீவித்யா, சகித்து சகித்து நொந்து போனவர் கலகலப்பான முதலாளி என்பது போய் சிடுமூஞ்சி முதலாளி என பெயர் எடுத்து விடுகிறார்,

 இந்நிலையில் பழைய ஸ்டெனோ திருமணமாகி விடை பெறுகையில் தன் தோழி எலிசபெத்தை சிபாரிசு செய்து இங்கே பணிக்கு சேர்க்கிறார், எலிசபெத் தன் கலாசாரப்படி  உடைகள் அணிபவர், சற்றும் கல்மிஷம் இன்றி அனைவரிடமும் பழகுபவர், அப்படியே இயல்பாக முதலாளியிடமும் பேச, முதலாளிக்கு அவர் மீது தூய நட்பு பிறக்கிறது,அவர் தன் மனம் விட்டு பேசக்கூடிய நட்பாக அமைகிறது, 

இதனால் மனைவி ஸ்ரீவித்யா அடிக்கடி தர்ணா செய்து பிறந்த வீடு செல்கிறார், அலுவலகத்தின் ஒவ்வொரு ஊழியரையும் அழைத்து உளவு அறிகிறார்,எலிசபெத்துக்கு துயரமான முன்கதை உண்டு,  காதலர் விஜயகுமாருடன் பிக்னிக் முடித்து பைக்கில் செல்கையில் லாரி மோதி காதலர் சம்பவ இடத்தில் பலியாகிவிட, இவருக்கு தலையில் அறுவைசிகிச்சை செய்துள்ளார் ,

 அலுவலகத்தில் பணிபுரிகையில் அடிக்கடி தலைவலி வருகிறது, ஆஸ்ப்ரோ மாத்திரைகளை ஏகம் விழுங்குகிறார், ஒருநாள் மயங்கியும் விழுகிறார், முதலாளி சிறப்பு சிகிச்சைக்கு சேர்க்க, மருத்துவர்கள் மூளையில் சிக்கலான அறுவை சிகிச்சை என்று நியூயார்க் சிறப்பு மருத்துவரை சிபாரிசு செய்கின்றனர், சிகிச்சைக்கு   மூன்று லட்சம் ஆகிறது, அதை தூய தோழமைக்காக செலவு செய்ய துடிக்கிறார் ஆனந்த்,

அலுவலகத்தில் பியூன்,ஹெட்க்ளார்க் துவங்கி  மனைவி வரை யாருக்கும் இந்த நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ள முடியவில்லை, மனைவி ஸ்ரீவித்யா மீண்டும் தந்தை வீட்டுக்கே குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுவிடுகிறார், எலிசபெத் இந்த விலை உயர்ந்த வெளிநாட்டு அறுவை சிகிச்சையை ஏற்க மறுத்து அமெரிக்கா செல்லும் நாளில் கதவடைத்து சாவை ஏற்க காத்திருக்கிறார், முதலாளி ஆனந்த் எத்தனை கேட்டும் திறப்பதில்லை, ஆனந்த தன் மனைவியிடம் நேரில் சென்று இறைஞ்சுகிறார், நீ ஆசையாக வளர்த்த நாய் சாகக் கிடக்கையில் பத்தாயிரம் செலவு செய்தும் அது பிழைக்காமல் போக நீ ஒருமாதம் அழுதாயே? அதன் பின் நாயே வளர்க்க ஒத்துக்கொள்ளவில்லையே, அதே போல தான் இதுவும், பழகியது ஆறுமாதம் என்றாலும் சிலரிடம் மட்டுமே ஆத்மார்த்தமான நட்புடன் பழகுவோம் அதுதான் எங்கள் நட்பு, அவள் நம் பிரசரசனையால் அறுவைசிகிச்சை உதவியை ஏற்க மறுக்கிறாள், நீ அவள் வீட்டுக்கு போய் நேராக விமான நிலையம் அழைத்து வா, நான் டாக்டருடன் விமான நிலையம் சென்று விமானத்தை தாமதமாக இயக்க வழிபார்க்கிறேன் என்று போகிறார், அதன் பின் ஸ்ரீவித்யா தன் தந்தையுடன் எலிசபெத் வீடு சென்று மன்றாடி அவரே பெட்டி படுக்கைகளை அடுக்கி காரில் ஏற்றி விமான நிலையம் அழைத்து வர, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சரியாக டேக் ஆஃப் ஆக வேண்டியதை பகீரத பிரயத்தனப்பட்டு நிறுத்தி அதில் படிக்கட்டு பேருந்தை கொண்டு வந்து இணைத்து இந்த தம்பதிகள் எலிசபெத்தையும் டாக்டரையும் ஏற்றி விடுகின்றனர், ஆனால் படிகள் ஏற  தலைவலி சகிக்கமுடியாமல் அதிகரித்து படிகளில் உருண்டு இந்த தம்பதிகள் மடியிலேயே எலிசபெத் உயிர்விட படம் நிறைகிறது.

அந்நாட்களில் ஆண் பெண் தூய நட்புக்கு இலக்கணமாக இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது, முதல் மரியாதை படத்தில் மலைச்சாமி- குயிலு  போன்ற ஒரு தூய நட்பு .

இசைஞானியின் பரீட்சார்த்த வேட்கை அபாரமானது ,இதில் மிகப்பெரிய கச்சேரி பாடல் வருகிறது.

முதலில் மேடைநிகழ்ச்சியில் கர்நாடக இசை பாகவதர் வி.கே.ராமசாமி தியாகராஜரின் கீர்த்தனையான கொலினே பாடுகிறார், பின்னணிக்கு பக்கவாத்திய கோஷ்டி வராத நிலையில் வெஸ்டர்ன் இசைக்கலைஞர்கள் இசையில்,  கொலினே பாடியது அபாரமான துணிச்சலுடன் அமைந்த  பரீட்சார்த்தம் அது. அடுத்த பாடல் கபி கபி மேரே தில் மேய்ன் அதை கல்யாணி ராகத்தில் பாடுகிறார் பாகவதர் வி.கே. ராமசாமி,இவை டிஎம்எஸ் அவர்கள் குரல் , 

அடுத்து மங்காப்புகழ் பெற்ற சுராங்கனி பாடல் மேடையில் வருகிறது,மலேசியா வாசுதேவன், ரேணுகா பாடிய பாடல் இளைஞர்களின் நாடித் துடிப்பு அறிந்து இசைஞானி தந்த பாடல் "சுராங்கனி"  இலங்கை பாடலில் இருந்து தழுவி உருவாக்கப்பட்டது, இந்த வகையில் மூன்று பரீட்சார்த்தம் என்றால்.
 
தேவன் திருச்சபை மலர்களே பாடலில் யேசுதாஸ் பாடிய வடிவம் எலிசபெத் காதலர் விஜயகுமார் பாட வருகிறது, பஞ்சு அருணாசலம் வரிகள்.

"தேவன் திருச்சபை மலர்களே" பாடலில் எலிசபெத் பாடுகையில் வரும் வடிவம்  பூரணி மற்றும் இந்திரா இருவர் பாட வருகிறது, 

பக்கத்து வீட்டு விதவைப்பெண் ஒய்.விஜயா தன் மகனுக்கு சோறூட்டப்பாடும் பாடல் பி.சுசீலா அவர்கள் பாடிய " தேனில் ஆடும் ரோஜா" வானொலியில் எத்தனை முறை கேட்டு ரசித்தபாடல் இது.

எஸ்பிபி அவர்கள் பாடிய " ஒருவீடு இரு உள்ளம்" என்ற நளினமான மனக்குறை பகிரும் பாடல் மிகவும் அற்புதமானது,பஞ்சு அருணாச்சலம் வரிகள்.

மனைவியின் சந்தேகத்துக்கும் அகராதித்தனமான பேச்சுக்கும் முதலாளி ஆனந்த் முற்றிலும் தன்னை ஒப்புத் தந்து பலியாடாக மாறுகையில் வரும் டிஎம்எஸ் அவர்கள் பாடும் பாடல் 

"குதிரையிலே நான் அமர்ந்தேன்" 

எத்தனை அழகான தத்துவப் பாடல் இது ,எத்தனை underrated rare gem இது,கவிஞர் கண்ணதாசன் வரிகள் இங்கே.

"குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா

குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா

முல்லையிலே கள்ளி வந்தால்
கள்ளியிலே முல்லை வந்தால்
கொல்லையிலே ஏதோ தப்பு
கண்ணைய்யா. அங்கே
கொடிக்கு விதை நீயா போட்டாய்
சொல்லையா

பன்னீருக்குள் வெந்நீர் இட்டாய்
வெந்நீருக்குள் பன்னீர் இட்டாய்
பன்னீருக்குள் வெந்நீர் இட்டாய்
வெந்நீருக்குள் பன்னீர் இட்டாய்

என்ன இந்த ரெண்டு வாசம்
உனக்கே தெரியுமடா
ஓஹோ..இதுதானோ குடும்ப பாசம்
எனக்கும் புரியுமடா

குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா

காளையிலே பால் கறந்து
வண்டியிலே பசுவை கட்டி
மேளத்துடன் கூட வந்தேன்
கண்ணைய்யா. அந்தக்
கோலத்துக்கும் காட்சி நீதான்
இல்லையா

குளிரும்போது மழையும் வந்து
கொதிக்கும்போது வெய்யில் வந்தால்
குளிரும்போது மழையும் வந்து
கொதிக்கும்போது வெய்யில் வந்தால்

இரண்டின் மீதும் குற்றமில்லை
யார் மேல் குற்றமோ
அந்த இரண்டையுமே நீ இணைத்தாய்
உன் மேல் குற்றமடா

குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா"

இந்த படத்துக்கு கல்கி இதழ் மலினமான காழ்ப்பு விமர்சனத்தை இசைக்கு மட்டும் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது, பரீட்சார்த்த இசை பற்றிய அறியாமையால் காந்தன் என்ற தொண்டு கிழம் எழுதிய விமர்சனம் இணைப்பில் பாருங்கள், இசைஞானி எத்தனை எதிர்ப்புகளையும் நக்கல் நையாண்டியையும் மீறி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் எனப் புரியும்.

அவர் எனக்கே சொந்தம் https://youtu.be/Rx7qn97Cqg4https://youtu.be/Rx7qn97Cqg4

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)