8-9-1936 ஆம் வருடத்திய D.K.பட்டம்மாள் அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி மைலாப்பூர் சங்கீத சபாவில் நடந்ததை அறிவிக்கும் சுவரொட்டி இது.
அன்று ஆண்கள் கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என தம்மை நிலைநாட்டிய மூவரில் D.K.பட்டம்மாள் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.
ஏறக்குறைய 87 ஆண்டுகளுக்கு முன்பு, இயல் இசையும் நாடகமும் எப்படி செழித்தோங்கியது என்பதன் உதாரணம் , சுதந்திரத்திற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு, சபாக்களில் கட்டணம் தந்து நுழைவுச்சீட்டு வாங்கிப் பார்த்துள்ளனர் பாருங்கள்.
முன்பதிவு இருக்கை - 1ரூ
முதல் வகுப்பு இருக்கை - 12 அணா
இரண்டாம் வகுப்பு - 8 அணா
சிறார்களுக்கு - 4 அணா