சாகேத்ராமிற்கு அபர்ணா தன் உடலில் ஒரு பாதி ,உயிரில் பாதி, கண்ணுக்குக் கண்,ஒத்த ரசனை கொண்டவள், அவள் போன பின் சாகேத் ராம் மானசீகமாக அங்கஹீனராகிப் போகிறார்,அவரின் கண்ணாடி இதயம் இப்படி சில்லாய் நொறுங்கியிருக்கிறது ,
அவர் கண்ணாடி மட்டும் பழுதாகவில்லை, அவர் உலகைப் பார்க்கும் கோணமே பழுதாகிறது, நேற்று வரை rationalistic பார்வை கொண்டிருந்தவர் எடுப்பார் கைப்பிள்ளையாக மதவாதத்தில் தீவிரமாக மூழ்குகிறார், நேற்று வரை ஒண்ணும் மண்ணாய் பழகிய முஸ்லிம்கள் இன்று எதிரிகளாகத் தெரிகின்றனர், வஞ்சம் இவர் கண்ணை இப்படி கண்ணாடி விரிசலாக மறைக்கிறது,
இந்த சில்லுப் பெயர்ந்த கண்ணாடி வழியாக எத்தனையோ விஷயங்களைச் சொல்கிறார் இயக்குனர், பார்வையாளர்கள் எத்தனையோ விஷயங்களை அவரிவர் கோணத்தில், பார்வையில் உள்வாங்கலாம்.
இந்தப்படம் முழுக்க சாகேத்ராமுக்கு நேர்ந்த இழப்பு, வலி,அவமானம் , துரோகம்,பழிவாங்கல்,துவேஷம்,பிரதான எதிரியை கருவருக்க கங்கனம் கட்டுதல், நண்பனை இழத்தல் ,ஆயுளுக்கும் குறுகுறுத்தல் எல்லாம் 89 வயது பெரியவர் சாகேத்ராம் பார்வையில் விரிபவை,
எல்லாம் first person singular,அதனால் தான் இவர் மனைவி அபர்ணாவின் வன்புணர்வு , படுகொலை,இவரின் மீதான sodomize rape attempt இவற்றுக்கு நுணுக்கமான details வைத்தவர் தான் கண்களால் பார்க்காத அம்ஜத் கொலை, மனோகர் லால்வானி மனைவி வன்புணர்வு , கொலை,பெரிய மகளின் காலரா சாவு,இன்னொரு மகளின் கைதவறி நேரும் விபத்து ஆகிய எவற்றையும் காட்சிப்படுத்தவில்லை,
ஆனால் இவரின் redemption ன் துவக்கப்புள்ளியான ஆசாத் சோடா ஃபேக்டரிக்கு எத்தனை நுணுக்கமான காட்சிகள் வைத்திருப்பதைப் பாருங்கள், அங்கே கைகலப்பில் அம்ஜத்தின் மாமாஜானைக் கொல்வார்,
உடன் இருந்த பெரியவரைக் கொல்வார்,
அங்கே சோடா ஃபேக்டரியில் தங்கியிருந்த ஆண்கள் அத்தனை பேரும் சாரி என்னும் இந்து மதவாத குண்டர் படையின் துப்பாக்கிச் சூட்டில் சாகக் காரணமாக இருப்பார் , அவ்வளவு ஏன் அம்ஜத் சாக காரணமாக இருப்பதும், அம்ஜத்தின் மைத்துனன் குரேஷி சாக காரணமாக இருப்பதும் சாகேத்ராம் தான்,
தன் நண்பன் அம்ஜத்தை போலீசாரின் ஸ்ட்ரெட்சரில் தூக்கி ஏற்றிவிட்டவர் உடன் செல்ல மாட்டார், அம்ஜத்தின் ரத்தம் சாகேத்ராமின் கையில் ஒட்டியிருக்கும்,நஃபீஸா உன் பொறுப்பு என கூறிய படி விடை பெறுவார் அம்ஜத், அதனால் அம்ஜத் அம்மா ,தங்கை நஃபீஸா மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாக அங்கேயே இருப்பார் சாகேத்ராம்.
#ஹேராம், #கமல்ஹாசன்,#சாகேத்ராம், #kamalhaasan,#heyram,#கண்ணாடி_இதயம்,#அம்ஜத்