நேற்று ஆன்லைனில் அச்சடிக்க தந்த business cards கைக்கு கிடைத்தது, வளைவுகள் பள்ளி மாணவர்கள் கையால் கட்டர் வைத்து வெட்டியது போல இருந்தது, புகார் மின்னஞ்சல்கள் எழுதுவதை கொரோனா காலத்தில் நிறுத்தியியதை திரும்ப ஆரம்பித்தேன் , சுருக்கமான மின்னஞ்சல் தான், உடனே மன்னிப்பு கேட்டு மீண்டும் பணமின்றி அச்சடித்து தருவதாக மின்னஞ்சல் வந்தது.
corners fillet செய்ய 100 அட்டைகளுக்கு 75₹ அதிகம் வாங்குகின்றனர், ஆனால் சிலரின் மெத்தனம் பாருங்கள்,
இது போல குறை கண்டுபிடித்து மாற்றம் கோருவதை design language ல் snagging என்பார்கள், துபாயில் என் ஆர்கிடெக்ட் அலுவலகத்தில் என்னிடம் இந்த snagging பணி தேடி வரும், காரணம் நேர்மையாக அதைச் செய்ததால், இப்படி என் மொபைலில் ஒரு லட்சம் புகைப்படங்கள் கூட எடுத்திருப்பேன், உரியவருக்கு குறையை இதமாக ஆனால் கண்டிப்பாக சுட்டி காட்டி மின்னஞ்சல் metro அல்லது taxiல் பயணிக்கையிலேயே அனுப்பி விடுவேன், இதனால் நான் site ல் இருந்து அலுவலகம் திரும்பும் முன்னரே வருத்தம் தெரிவித்து தீர்வு மின்னஞ்சல் வந்திருக்கும்.
என் சகாக்கள் நிறைய புகைபிடிப்பவர்கள், தினம் மது அருந்துபவர்கள் , காபி குடிக்காமல் மின்னஞ்சல் அனுப்ப முடியாதவர்கள் ஆதலால், அவர்களுக்கு மொபைலில் பார்த்து மின்னஞ்சல் செய்ய வராது, கைவிரல்கள் நடுங்கும், 60 வயதில் வர வேண்டிய தள்ளாமையை நடுக்கத்தை 40 வயதிலேயே அனுபவிக்கின்றனர்.
#time_management,#snagging