The World's Fastest Indian
இது இந்தியரைப் பற்றிய படம் அல்ல,Indian என்ற 1920 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அமெரிக்க ரேஸ் மோட்டார் சைக்கிள் பற்றிய படம்.
உலகில் எந்த மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரருக்கும் மோட்டார் சைக்கிள் ரேஸின் மெக்காவான Bonneville Salt Flats ற்கு தன் மோட்டார் சைக்கிளைக் கொண்டு சென்று அதன் முழு வேகத்திறனை பரிசோதிக்கும் ஆசை இருக்கும்.
அப்படி நியூசிலாந்தில் இருந்து அமெரிக்காவின் Utah பாலைவனத்திற்கு 11,636 km பயணித்து வருகிறார் 68 வயது Burt Munro,இவர் உடன் கொண்டு வரும் இந்தியன் மோட்டார் சைக்கிளின் வயது 47 ,
உலகசாதனை நிகழ்த்த வயது படிப்பு இவை ஒரு தடையில்லை என்று தன் சாதனை மூலம் உலகிற்கு உரைத்தவர் பர்ட் மன்ரோ.
பர்ட் மன்ரோ தன் மோட்டார் சைக்கிளில் utah பாலைவனத்தில் உள்ள Bonneville Salt Flats என்ற உப்பு படிம நிலப்பரப்பிற்கு பல இடர்களைத் தாண்டி வந்து சேர்கிறார், அந்த இயற்கை race track நிலப்பரப்பில் 325 கிமீ உச்ச வேகத்தில் தன் மோட்டார்சைக்கிளில் பயணித்து உலக சாதனை நிகழ்த்துகிறார்,
இது பர்ட் மன்ரோ என்ற நியூசிலாந்து நாட்டு அமெச்சூர் மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரரின் உண்மைக்கதை, இது 1967 ஆம் ஆண்டின் கதைக்களம்,
நியூசிலாந்து நாட்டுக் கிழவர் பர்ட் மன்ரோவாக நம் ஹானிபல் லெக்டர் புகழ் அந்தோனி ஹாப்கின்ஸ் நடித்துள்ளார்,பிரிட்டீஷ் நடிகர் ஊரக நியூசிலாந்து வாசியாகவே மாறியது போலவே இருக்கும் இவரின் தோற்றம் ,
அந்தோனி ஹாப்கின்ஸ் அற்புதமான நடிகர், இது அற்புதமான படம் ,அவசியம் பாருங்கள்.
#the_worlds_fastest_Indian,#anthony_Hopkins,#burt_munro