ஹேராம் படத்தில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடலில் அபர்ணா பியானோவின் நடு பெடலில் தலை வைத்துப் படுத்திருப்பார், நடுப் பெடலை தலையால் வாசிப்பார், சாகேத்ராம் பியானோ மேலே விசைப்பலகையில் வாசித்தபடி கீழே வலம் , இடம் உள்ள பெடல்களை தன் கால்களால் அழுத்துவார்,
நான் 20 வருடங்கள் முன்பு பார்க்கையில் யோசித்திருக்கிறேன், இது என்ன இப்படி ஒரு காட்சி? பெண்ணின் கழுத்தை ஒரு ஆண் தன் கால்களால் நெரிப்பது போல என்று? எனக்கு 20 வருடங்களுக்கு முன்பு பியானோவுக்கு கீழே 3 பெடல்கள் இருப்பதே தெரியாது, அவ்வளவு ஏன்? இது போன்ற Grand பியோனோவை இருபது வயது வரை நேரில் பார்த்தது கூட கிடையாது, அவ்வளவு தான் என் பொது அறிவு.
பின்னர் எங்கள் வீட்டில் பூஜை அறையில் உள்ள விஷ்ணு பாதங்கள் பொறித்த சடாரி தட்டைப் பார்க்கையில் அந்த நாமத்தின் இருகோடுகள் நாராயணன் பாதம் என்றும் திருமண் திருமகள் முகம் என்றும் புரிந்தது.
வைணவத் திருமணங்களில் மணமக்களை லட்சுமி நாராயணன் என்பார்கள்,மணமகளை ஆண்டாள் போல அலங்கரிப்பர், சைவர்களில் மீனாட்சி சொக்கநாதர் என்பார்கள் அதே themeல் மணமக்களை அலங்கரிப்பர், இதில் சாகேத்ராம் அபர்ணா ஜோடிகளின் தோற்றம் லட்சுமி நாராயணன் அம்சமாகவே வெளிப்பட்டுள்ளது,
ஆனால் detail ஆக இல்லை, subtle ஆக, இது இப்படித் தான் இருக்கும் என்று சொல்லவில்லை, இப்படி இருக்கலாம் என சொல்கிறேன்.
இந்த பியானோவை அபர்ணாவை வாசிக்க வைத்து அவர் கீழே
படுத்திருக்கக்கூடாதா? எனவும் யோசித்திருக்கிறேன்,படத்தில்
சாகேத்ராமுக்குத் தான் பியானோ நன்கு வாசிக்க தெரிகிறது,
அபர்ணாவுக்கு கவிதை நன்கு வாசிக்க வருகிறது, அதனால் தான் அந்த பாண்டித்யங்களுக்கு (expertise ) பொருத்தமாக (relevant) இயக்குனர் கமல்ஹாசன் காட்சிகள் வைத்தார் என நினைக்கிறேன்.
#ஹேராம், #கமல்ஹாசன், #பியானோ,#சாகேத்ராம்,#அபர்ணா