மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் இடம்பெற்ற சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் பாடலை படம் பிடிக்க கமல்ஹாசன் மற்றும் குழுவினர் பகீரதப் பிரயத்தனப்பட்டனராம்.
முதலில் இந்தப் பாடலை இயக்குனர் சிங்கீதம் அவர்கள், s.n.லட்சுமி அவர்கள் செய்த நார்மடி பாட்டி போலவே 20 பாட்டிகளைத் திரட்டி வந்து ஆடிப் பாடுவது போல படமாக்க நினைத்தாராம், ஆனால் இசைஞானியின் இந்த பாலக்காடு கீர்த்தனமாட்டி பாணி ட்யூனால் கவரப்பட்டு இது தான் சரியாக இருக்கும் என முடிவுக்கு வந்தாராம்.
இதில் புதுமையாக நொடிக்கு 48frames என பாடல் காட்சியை வேகமாக படம் பிடித்தனர், வழக்கமாக 24 frames ல் தான் படம் பிடிப்பார்கள்.
அது பற்றி ஊர்வசி முன்னர் பேட்டி அளித்திருந்தார், "பாடல் முழுவதும் ஸ்லோ மோஷன் முறையில் எடுப்பது என்று முடிவானது.. ஆனால் பிரச்சினையே பின்னர் தான்.. சாதாரணமாக பாடல் ஒலிக்க விடப்படும், அதைக் கேட்டு பொருத்தமாக வாயசைக்கலாம்.. நடிக்கலாம்..
ஆனால் இதில் பாடல் வரிகளை, கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு வேகமாக வாயசைக்க வேண்டும்..
அப்போதுதான் ஸ்லோ மோஷன் முறையில் பார்க்கையில் உதட்டசைவு பாடல் வரிகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
அதனால் கமல் ரொம்ப ரொம்ப டென்ஷனாக இருந்து தான் வேலை வாங்குவார், இப்போது போல உடனுக்குடன் பார்த்து திருத்தம் செய்ய முடியாது.
ஒரு காட்சி எடுத்த உடனே லேப் சென்று போட்டு பார்த்து, 'ஓ.. இன்னும் வாயசைவு கொஞ்சம் ஸ்பீட் பண்ணணும்..' என்பார்.. பாடலில் lip sink இன்றிப் போனால்... 'என்னைய்யா படம் எடுத்திருக்காங்க..' னு ஒரே வார்த்தையில முகத்தில் துப்பிட்டு போயிருவாங்க..
அவங்ககிட்ட போய், 'நாங்க இப்படியெல்லாம் சிரமப்பட்டோம்.. அதுல கொஞ்சம் தப்பாயிருச்சு'னு சொல்ல முடியாது.. என்று அடிக்கடி சொல்லுவார்.
ஆனாலும் கேமரா ரெடி ஆக்க்ஷன்னு குரல் வந்ததுமே,100% தலைகீழான ஆசாமி ஆயிருவார்,ரொமாண்டிக் பார்வை.. காதல் கொண்டு அசடு வழியும் முகத்தோடு தோன்றி வியக்க வைப்பார்.
அந்த பாடலின் இடையே.. ஒரு கிணற்றைச் சுற்றி ஓடும் காட்சியில் நாங்கள் படு வேகமாக ஓடினோம்.. அந்த டென்ஷனில்.. ஸ்பீடில் கூட முகத்தில் வெட்கம் காதல் போன்ற உணர்ச்சிகள் மட்டுமே தெரிய வேண்டும்.
எனக்கு கூட சமயங்களில் சலிப்பு வரும்.. ஆனால் மனுஷன் எத்தனாவது டேக் ஆனாலும் கூட அசராமல் காதல் பார்வையோடு ஓடி வருவார்"
என்று ஊர்வசி கூறியுள்ளார்.
#ஊர்வசி,#கமல்ஹாசன்,#மைக்கேல்_மதன_காம_ராஜன்,#lip_sink