அக்கர (வெளிநாடு) 1984 ஆம் ஆண்டு வெளியான மலையாள Slapstick பாணி adult comedy திரைப்படம், இயக்கம் K. N. Sasidharan,
படம் ஒன்றரை மணி நேரம் தான், பாடல்களே கிடையாது, மிகவும் விறுவிறுப்பாக நகைச்சுவையாக நகர்கிறது, இதில் நடிகர் சீனிவாசன், மம்மூட்டி, மோகன்லால் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
பரத்கோபி என்ற ஒற்றை நடிகரை நம்பி எந்த கதையையும் இயக்கலாம்,அதிலும் சுய எள்ளல் கதாபாத்திரங்கள் என்றால் போதும், அற்புதமான நடிகர், உடன் மாதவியும் உண்டு,கேட்கவே வேண்டாம்.
இதில் பரத்கோபி, கோபி என்ற தாஸில்தார் , பெரிய பதவி ,ஜீப், டிரைவர் ,ப்யூன் என எல்லாம் அரசாங்கத்தில் தந்திருந்தாலும் லைசன்ஸ்ராஜ் யுகத்தில் நக்காப்பிச்சை சம்பளம் தான் வாங்க முடிகிறது,
சதா மனைவி பத்மாவதியின் (மாதவி)முனுமுனுப்பு, இவர் வயதை ஒத்த ஆண்கள் கல்ஃபில் சென்று திர்கமில் பத்தாயிரக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என புகார் வாசிக்கிறார்,எந்நேரமும் ஒப்பீடு.
அந்நிய gadgets, பொருட்களுக்கும் புடவைக்கும் ,தங்க நகைகளுக்கும் அப்படி ஆசைப்படுகிறார், பிற கல்ஃபர்களைப் போலவே சுற்றுவட்டாரத்தில் கௌரவமாக தலை நிமிர்ந்து வாழ பிரயத்தனப்படுகிறார், எப்பாடு பட்டாவது NOC ,இலவச Visa வாங்கி தன் கணவரை கல்ஃபிற்கு எந்த blue collar வேலைக்கேனும் அனுப்ப கங்கனம் கட்டுகிறார்.
இப்போது தாஸில்தாரின் நண்பர் ஜானி (நெடுமுடி வேணு) துபாயில் இருந்து வந்தவர் தாஸில்தாருக்கு தன் வீட்டில் வைத்து 120 திர்கம் தந்து வாங்கிய Ye Whisky of Ye Monks என்ற பெயரெடுத்த ஃபாரின் ஸ்காட்சை நன்கு ஊற்றி விடுகிறார்,
அவர் மனைவிக்கு பாலியெஸ்டர் புடவை, அவருக்கு round neck T-shirt பரிசு தருகிறார்.மனைவி அவரிடம் தயங்கியபடி ஒரு விஸா சரியாக்கித் தரச் சொல்ல , இப்போது டைப்பிங் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்,எனவே கோபியேட்டனை டைப்பிங் படிக்க சொல்லுங்கள் என்கிறார்.தான் டூட்டி கட்டாமல் இறக்குமதி செய்து கொண்டு வந்த ஒலிம்பஸ் SLR கொண்டு இருவரையும் படம் எடுப்பது போல பத்மாவதியை zoom செய்து படங்கள் எடுக்கிறார் ஜானி
இப்போது தாஸில்தார் கோபி வேலை முடிந்ததும் மகளிர் தட்டச்சு பயிலும் தட்டச்சு நிலையம் தினம் சென்றவர், ஆறே மாதங்களில் நாளிதழ் செய்தியைப் பார்த்து வேகமாக தட்டச்சு செய்ய பயில்கிறார்.
இப்போது தாஸில்தாரின் நண்பர் இஸ்மாயில் (மம்மூட்டி) ஷார்ஜாவில் இருந்து ஊருக்கு வந்தவர் புல்லட்டில் வலம் வருகிறார், அப்போது நிலவிய சிமெண்ட் தட்டுப்பாடு காரணமாக, அவருக்கு மாட்டு கொட்டகை அமைக்கத் தேவையான 20 மூட்டை சிமெண்ட்டிற்கு தாசில்தார் சான்று தேவைப்படுகிறது, அதற்கு பிரதி உபகாரமாக தான் ஷார்ஜாவில் இருந்து கொண்டு வந்த சூட்கேஸ் மாடல் டைப்ரைட்டரை தாஸில்தாருக்கு கூடையில் வைத்து வாழை இலையால் போர்த்தி சிறுவனிடம் தந்து விட்டு அனுப்புகிறார்.
மனைவி பத்மாவதி அவரிடம் மெல்ல ஒரு விஸா சரியாக்கித் தரச் சொல்கிறார்,இவருக்கு டைப்பிங் நன்றாக தெரியும் என்கிறார், ஆனால் ஊரில் பெயரெடுத்த டெய்லரின் மகனான இஸ்மாயிலோ இப்போது டைப்பிங் அறிந்தால் நல்ல வேலை கிடைப்பதில்லை, இந்த வேலைகள் லெபனிக்கும் , மிஸிரிக்கும்(Egyptian) தான் செல்கிறது என்கிறார்.தற்சமயம் டெய்லரிங் படித்தால் நல்ல சம்பளம் கிடைக்கும், தன்னால் விஸா சரியாக்கித் தர முடியும் என்கிறார்.
இப்போது தாஸில்தார் வேலை முடிந்ததும் ஊரின் ஒதுக்குப்புறமாக தன் வீட்டின் திண்ணையில் டெய்லர் கடையும் பெட்டிக் கடையும் ஒருங்கே வைத்திருக்கும் கொச்சுண்ணியிடம் சென்று இரவில் தையல் படிக்கிறார், வேகமாக தையல் கலையையும் பயில்கிறார். அவர் மகளோ தாஸில்தாரை கண்ணாலே தின்கிறாள்.
இப்போது தாஸில்தார் அலுவலகத்தில் டெய்லர் அச்சுண்ணிக்கு தெரிந்தவன் என்று ஒருவன் துபாய்க்கு group visa வில் டிரைவர் பணிக்கு செல்ல இவரிடம் experience letter கேட்டு வருகிறான்,அவர் நான்கு நாள் கழித்து வரச்சொல்ல, அவன் இவர் இரவில் தையல் பணி படிப்பதை அறிவேன் என்கிறான்,இவர் பதறியபடி உடனே கொடுத்து அனுப்புகிறார்.
ஆனால் இவர் ஒரு மண்டன் தாஸில்தார், அங்கே ஊரில் கொச்சுண்ணி மகள் பெயரெடுத்த விலைமாது என அறியாமல் அவள் விரித்த வலையில் வசமாக விழுந்து விடுகிறார்,அங்கு அவளுடன் ராத்தங்குகிறார்.
விடியலில் வெளியே திருடனை ஊரார் துரத்த, இவர் ஏதோ தன்வீட்டில் படுத்திருந்தது போல எழுந்து சென்று திருடனைத் துரத்துகிறார்.
திருடன் ஒரு திருப்பத்தில் தப்பி விட, சட்டையில்லாமல் ஓடும் இவரை பிடித்து ஊரார் அடித்து துவைத்து, கை காலை கட்டி டாக்ஸியில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனில் விடுகின்றனர்.
அங்கே இன்ஸ்பெக்டருக்கு தாஸில்தாரைத் தெரிந்ததால் மக்களை விரட்டிவிட்டு மருத்துவமனை அழைத்துப் போய் முதலுதவி செய்து கட்டுகள் கட்டி,இவரை வீட்டில் கொண்டு விடுகிறார், இப்போது டெய்லரிங் மெல்ல நின்று போகிறது,
இப்போது தாஸில்தார் கோபி ஊரின் பெரிய மைதானத்தில் அம்பாசடர் கார் கொண்டு டிரைவிங் படிப்பிப்பதை உச்சி வெயிலில் நோட்டம் விடுகிறார்,ஏகலைவனாக டிரைவிங் படிக்கிறார்.
இப்போது தாஸில்தார் மனைவியின் தூரத்து உறவினன் சுகஏட்டன் ( மோகன் லால் ) துபாயில் இருந்து வந்தவர் , பத்மாவதிக்கு பாலியெஸ்டர் சேலை தருகிறார் ,அவர் அம்படக் கள்ளன் உள் பாடிகள் கூட லஞ்ஜையின்றி தருகிறார், தாஸில்தார் வேலையை விட்டு வரக்காத்திருத்தவர் அவரிடம் தலைக்கு கருப்புச் சாயம் அடிக்கும் special brush மற்றும் இது மற்றது என்று விறைப்பிற்கு உபயோகிக்கும் ஸ்பரேயை கண்ணடித்தபடி தந்து செல்கிறார்.
கௌரவம் பார்க்காமல் எந்த வேலையும் செய்தால் தன்னைப்போல நாலாயிரம் திர்கம் நல்ல சம்பளம் கிடைக்கும் என்கிறார்.
தாஸில்தார் இரவில் தன் பின்னந் தலைக்கு கருப்பு சாயம் அடிக்கச் சொல்லி கேட்டவர்,தலை காய்ந்ததும், அந்த மற்ற ஸ்பரேயை உபயோகித்து அறைக்கதவை தாழிட்டது தான் தாமதம், பத்மாவதியின் அலறல் சப்தம், மறு காட்சியில் அங்கே கட்டில் தட்டு முட்டு சாமான்கள் உடைந்து, தலையணை பஞ்சுகள் வெளியேறி சந்தைக்கடையாக காட்சி அளிக்கிறது அந்த அறை.
விபச்சாரம் நடந்த வீட்டிற்கு சென்று வந்த தாஸில்தார் என்று இவரது பெயரும் தினசரியில் வர ஊர் சிரிக்கிறது, இவரது தாஸில்தார் வேலையில் இருந்தும் இடை நீக்கம் செய்யப்பட்டதாக இவருக்கு கடிதமும் வருகிறது.
அடுத்து இவர் மனைவி சொல்லே மந்திரம் என்று ksrtc புறநகர் பேருந்து நிலையத்தில் porter வேலையில் இருக்கிறார், முதல் காட்சியில் வந்த ஜானி அடுத்த vacation லும் வந்து விடுகிறார், முன்பைப் போன்ற 56 அங்குல நீளமுள்ள ராட்சத பெட்டி,அதன் மீது கட்டிய பெரிய பாலீதீன் பார்சல்,உடன் இரண்டு கைப்பெட்டிகள் , இவற்றை ஜானி முன்னாள் தாஸில்தார் கோபி தலையில் ஏற்றி வீட்டுக்கு வருவதாக படம் முடிகிறது.
ps: நான் துபாயில் பணியாற்றுகையில் உடன் பணிசெய்த மலையாளி நண்பரின் மனைவி கேரளத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியராக பணியில் இருக்கையில் அங்கு நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு இங்கு துபாயில் வந்து டெலிபோன் ஆபரேட்டராக பணியாற்றினார் , அங்கு ஆசிரியை சம்பளம் கண்டிப்பாக 60 ஆயிரம் வரும் என்றாலும் இங்கு வாங்கும் ஐயாயிரம் திர்கம் அவர்களுக்கு பெரிய பணமாக நினைத்தனர்,இங்கு துபாயில் vacation அனுப்புகையில் அங்கு கேரளம் சென்று சில தினங்கள் பணியில் அமர்வார், மீண்டும் விடுமுறைக்கு விண்ணப்பித்து மீண்டும் துபாய் கிளம்புவார், இதை நிறைய மலையாளி கல்ஃபர்கள் பதிவாகவே வைத்துள்ளனர்,நம் அரசு சட்டங்களும் இப்படி வளைப்பதற்கு தோதாகவே உள்ளன.
#பரத்கோபி,#மாதவி,#மம்மூட்டி,#மோகன்லால்,#நெடுமுடிவேணு,#சீனிவாசன்,#லைசன்ஸ்ராஜ்,#கல்ஃப்,#துபாய்,#ஷார்ஜா,#அக்கர