நேற்று மகளின் +2 பொது தேர்வு நிறைவு பெற்றதற்கு வந்த வாழ்த்துகள் எங்களுக்கு புதிய உத்வேகம் தந்தன, பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகும் என்பதன் அர்த்தம் அறிந்தேன்,வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி .
JEE Mains , JEE Advanced தேர்வுகள் அதன் பயிற்சி விபரங்கள் பற்றி சிலர் கேட்டிருந்தனர் ,அவர்களுக்காக இந்த பதிவு.
"JEE mains" போட்டித் தேர்வு மதிப்பெண்களை வைத்து இந்தியா முழுக்க உள்ள 31 நகரங்களில் உள்ள NIT (National Institute of Technology) ல் சேரலாம்.
"JEE mains" போட்டித் தேர்வு மதிப்பெண்களை வைத்து இந்தியா முழுக்க 25 நகரங்களில் உள்ள IIIT (Indian Institute of Information Technology) ல் சேரலாம்
JEE advanced போட்டி தேர்வு மதிப்பெண்களை வைத்து இந்தியா முழுக்க 23 நகரங்களில் உள்ள IIT ல் (Indian Institute of Technology) சேரலாம்.
Delhi Technological University போல இதர பல அரசின் பெருமைமிகு தொழிற்நுட்ப நிறுவனங்களில் சேரலாம்.
நான் இதில் VIT போன்ற தனியார் நிகர்நிலை பல்கலை, பொறியியல் கல்லூரிகளை பற்றி குறிப்பிடவில்லை, அங்கும் இந்த JEE mains, JEE advanced மதிப்பெண்களை வைத்து மாணாக்கர்கள் சேரலாம்.
JEE mains மற்றும் JEE advanced போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிக்காலம் சுமார் 3 வருடங்கள் வரும், ஒரு மாணாக்கர் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம் இளங்கலை படிக்க எண்ணுபவர் அவர் 95% மதிப்பெண்களுக்கு மேல் பள்ளி தேர்வுகளில் வாங்குபவர் என்றால் இந்த பயிற்சியில் தாராளமாக சேரலாம்.அர்த்தமாக இருக்கும்,
குறிப்பாக இந்த பயிற்சியில் சேர மாணவர்கள் சுய விருப்பம் அவசியம், பெற்றோர் அழுத்தம் அறவே கூடாது, எனக்கும் என் மனைவிக்கும் இந்த JEE விபரங்களை நுணுக்கமாக படித்து சொன்னது எங்கள் மகள் தான், நாங்கள் இது வரை எந்த அழுத்தமும் தந்ததில்லை, இந்த துறை படி அதுவே சரி, என திணித்ததில்லை, அது நமக்கு ஒத்து வராது என தடுத்ததில்லை.
சில பள்ளிகளில் தினமும் வகுப்பு முடிந்த பின் integrated ஆக இந்த JEE பயிற்சி தருகின்றனர், என் மகள் பள்ளியில் அந்த பயிற்சி தருவதில்லை,நாங்கள் வசிப்பது பம்மல், பள்ளி இருப்பது குரோம்பேட்டை, எனவே எங்களுக்கு அருகாமையில் உள்ள JEE பயிற்சி மையம் என்றால் K.K.நகர் ராமசாமி சாலையில் உள்ள Fiitjee ஆகும்.
என்மகள் 9 ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் , ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் FiitJEE மையம் நடத்தும் bigbang ஸ்காலர்ஷிப் தேர்வு எழுதி 50% பயிற்சி கட்டண சலுகை பெற்றார், மகளிர்க்கான சலுகையான 25% பயிற்சி கட்டண சலுகையும் சேர மொத்தம் 75% பயிற்சி கட்டண சலுகை பெற்றார், ஒவ்வொரு வார இறுதி சனி , ஞாயிறும் முழு நேர வகுப்பு உண்டு, பண்டிகை விடுமுறை குறுக்கிட்டால், அதற்கு ஈடு செய்ய வார நாட்களில் மாலையில் வகுப்பு உண்டு, சனி மாலை 4-30 முதல் 8-30, ஞாயிறு காலை 9-30 முதல் 4-30 ,என வாரா வாரம் வகுப்புகள் உண்டு, வாரா வாரம் தேர்வுகள் உண்டு,இது தவிர வாரநாட்களில் மாலை வேளைகளில் TAB ல் பாடம் நடக்கும், தேர்வுகள் நடக்கும், 95 சதம் வருகை அவசியம், Fiitjee வகுப்பறைக்கு உள்ளே சென்ற மாணவர்கள் வகுப்பு முடிந்த உடன் தான் வெளியே வரமுடியும்.
ஒரு குழந்தைக்கு ஸ்பூனில் ஊட்டுவது போல துவங்கி தானே சாப்பிட வைப்பது தான் இப்பயிற்சியின் தத்துவம், 10,11,12 ஆம் வகுப்புகளில் அவர்களின் பள்ளி பாடத்திட்டத்தில் இருக்கும் maths ,physics, chemistry பாடங்களுக்கேற்ப JEE advanced, JEE mains பாடங்களை இலகுவாக அனுகுவதற்கு தீவிரமான பயிற்சி அளிப்பார்கள், இதனால் 10th, 11,12 வகுப்புக்கு வெளியே ட்யூஷன் சேர அவசியம் இருக்காது, byjus போன்றவை சேர வேண்டாம், எனவே இந்த JEE பயிற்சிக்கட்டணம் 100% தகும் என்பேன்,அவர்கள் இந்த மூன்று வருடங்களுக்கு சுமார் 100 reference புத்தகங்களுக்கு மேல் தருகின்றனர், அவற்றை படித்து கணக்கு புதிர் நீக்கி பயிற்சி செய்தால் பள்ளியிலும் நல்ல மதிப்பெண்கள் எடுக்கலாம், படிப்பில் ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சி , கண்டிப்பாக இது மாணாக்கரின் தன்னார்வம் கோருகிற பயிற்சி,பெற்றோர் கட்டாயத்துக்காக சேர்ந்தால் நிச்சயம் மாணாக்கர்கள் அழுத்தம் தாளாமல் வெளியேறி விடுவர்.
எனவே என்னால் முடிந்தது சரியான நேரத்துக்கு பள்ளியில் இருந்து வீடு, வீடு முதல் பயிற்சி மையம்,பயிற்சி மையம் முதல் வீடு, மறுநாள் பயிற்சி மையம் என கண்ணும் கருத்துமாக மகளை கொண்டு விடுவேன், இதற்கு தான் priority, மற்றவை அடுத்த பட்சம் என வகுத்துக் கொண்டேன், இப்படி கொண்டு விட்டு கூட்டி வர முடிந்தவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம், காரணம் பல நாட்கள் வார இறுதி சாலை வாகன நெரிசல், கனமழை என வாட்டும்,அப்போது பெற்றோர் பயிற்சி முடிந்து திரும்பாத மாணாக்கரை நினைத்து பரிதவிக்க வேண்டும் என்பதால் சொல்கிறேன்.
அரசுப்பள்ளியில் 9 ஆம் வகுப்பில் எல்லா பாடங்களிலும் 95% மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக தனியார் பயிற்சி மையங்களில் சேர முழுத்தொகைக்கும் கூட ஸ்காலர்ஷிப் கிடைக்கும், அந்த ஸ்காலர்ஷிப் தொகை மூன்று லட்சம் ரூபாய் இருக்கும், ஆனால் வேறு வழியில்லை,
நாம் உதவி கேட்க தயங்கக் கூடாது, எத்தனையோ நல்ல உள்ளங்கள், அரசு பள்ளியில் படித்து சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்,சிறு நிறுவனங்கள் இன்று JEE ஸ்காலர்ஷிப் தருவதற்கு தக்க மாணவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், உங்கள் முன் சமூக ஊடகம் உள்ளது, தகுதி உள்ள மாணவர்களுக்கு கண்டிப்பாக உதவிகள் கிடைக்கும், அரசுப் பள்ளி மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் உங்கள் தேர்வுத் தாள்களை பிரதி எடுத்து வையுங்கள், தர அட்டையை பிரதி எடுத்து வையுங்கள், வகுப்பு ஆசிரியரிடம் தலைமை ஆசிரியரிடம் நற்சாட்சி பத்திரம் ,சிபாரிசு கடிதம் கேட்டுப் பெறுங்கள்.
அதன் பிறகு JEE main நுழைவுத்தேர்வுக்கு நான்கு வருட பயிற்சி தரும் Fitjee, Allen , Ahaguru, Resonance, Chate,PACE ,Bansal போன்ற நிறுவனங்களில் உங்களுடைய நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள், அதில் பயிற்சி கட்டண சலுகைக்கு நுழைவுத் தேர்வுகள் எழுதுங்கள், நன்கு படிக்கும் மாணவர்களால் 50% வரை கூட கட்டண சலுகை தேர்வெழுதி பெற முடியும்,நன்கு படிக்கும் மாணவியருக்கு 25% சதம் கட்டண சலுகை மகளிர் முன்னேற்றத்துக்காக கூடுதலாக கிடைக்கும்.
9,10,11,12 ஆம் வகுப்புகளில் பள்ளிப்பாடம் உடன் இந்த JEE coaching ற்கும் சனி ஞாயிறு தினங்களில் செல்ல வேண்டி வரும்,நிறைய பயண அலைச்சல் இருக்கும், தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டி வரும், கடும் உழைப்பு கோரும் பயிற்சி,ஆனால் IIT க்குள் நுழைந்து விட்டால் ஒரு மாணவர் உழைத்த உழைப்பிற்கு வாழ்நாளுக்கும் பலனிருக்கும் .
CBSE மாணவர்கள் மட்டும் அதிக அளவில் நுழையும் IIT , IISC நிறுவனங்களுக்குள் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் நுழைய வேண்டும் என்பதே என் விருப்பம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உங்கள் மாணவர்களுக்கு அதற்கான வழிகாட்டுதலை முன்னெடுப்பை தாருங்கள்,ஒன்று பத்தாக,பத்து நூறாக, நூறு ஆயிரமாக, ஆயிரம் லட்சமாக வரும் ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெருகுவர்.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்ற அரசாணை உள்ளதை நினைவில் வைப்போம், நம் மாணவ மணிகளுக்கு ஊக்கமும் உத்வேகமும் தருவோம்.
அரசுப்பள்ளியில் படித்து ஐஐடி, ஐஐஎஸ்சி,எய்ம்ஸ்-ல் இளநிலை பயில்வதற்கான முழு செலவை மாநில அரசே ஏற்கும்,6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இந்த உதவியை பெறலாம் - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
18|03|2022-2:00PM
பின்குறிப்பு: உங்கள் குழந்தைகளை JEE பயிற்சியில் சேர்க்க விழைவோர் ஒருமுறை இங்கே K.K. நகர் சென்று விசாரிக்கவும்,பல தகவல்கள் தருவர்,எனக்கு சேத்துப்பட்டு , நுங்கம்பாக்கம் பிற மையங்கள் பற்றி தெரியவில்லை, competitor பயிற்சி நிறுவனங்கள் பற்றி தெரியவில்லை.
Fiitjee Towers, DR, 51, Ramaswamy Salai, K. K. Nagar, Chennai, Tamil Nadu 6000780, 44 4213 5965
இதற்கென்றே குணமான ஒருவரை நியமித்துள்ளனர்,அவர் தமிழகமெங்கும் உள்ள மற்ற பயிற்சி மையங்கள் பற்றிய தகவல்களையும் தருவார்,ஒரு முறை பெற்றோர் சென்று வாருங்கள்,அடுத்த முறை ஐயங்களை குழந்தைகளுடன் சென்று கேளுங்கள்,அதன் பின் அவர்கள் தந்த brochure ஐ ஒன்று விடாமல் படிக்க சொல்லுங்கள்,படியுங்கள், JEE விண்ணப்ப படிவம் 30 பக்கம் இருக்கும், படிப்பவரும் பெற்றோரும் என 90 கையொப்பம் இட வேண்டி வரும், Exit ,Instalment ,Fullpay என மூன்று options உள்ளது,நீங்கள் மூவர் சேர்ந்து என்ன option சேருவது என முடிவு செய்யுங்கள், அதற்கு இந்த நேரே சென்று விசாரிப்பது மிகவும் பயனளிக்கும்,
எனக்கு business calls மட்டுமே ஏற்று பேச முடியும் என்பதால் கமெண்ட்ஸில் உங்கள் ஐயங்களை எழுதவும், நிச்சயம் பதிலளிக்கிறேன், அது பிற பெற்றோருக்கும் FAQ போல அமையும்.