கடந்த இரண்டு மணி நேரமாக பம்மல் மெயின் ரோடு பகுதியில் இரண்டு நிமிடத்துக்கு ஒரு நாட்டு வெடி வெடிக்கின்றனர்,அது எட்டு திக்கும் எதிரொலிக்கிறது, எத்தனை noise pollution?, எத்தனை மருத்துவமனை நோயாளிகளுக்கு மனப்பதட்டம்?எத்தனை பள்ளி மாணவர்களின் தேர்வுக்கு கவனச் சிதறல்? எத்தனை தெருநாய்களுக்கு தொல்லை?
எவனாவது மண்டையைப் போட்டால் அமைதியாக கொண்டு போய் தூக்கி போடுவதற்கென்ன? எத்தனை பேரை வாட்டி வதக்கி இப்படி ஒரு பிறந்த நாள் கொண்டாட்டமோ? சவ ஊர்வலமோ ,அரசியல் கட்சி கூட்டமோ தேவையா? போலீஸாருக்கு இத்தனை அதிகமான டெஸிபல் வெடிச்சத்தம் கேட்காமல் இருக்காது , எதற்காக மணிக்கணக்கில் வெடிப்பதை பொறுத்துக் கொண்டிருக்கின்றனர் தெரியவில்லை?
PS: இப்போது தான் மேற்படி சவ ஊர்வலம் போனது, சாலை முழுக்க ஸ்பீட் ப்ரேக்கர் போல மாலைகளை இறைத்து விட்டு,நாளை பொழிச்சலூர் மாடுகளுக்கு செம தீனி.
#noice_pollution,#சவத்தெழவு,#நாட்டு_வெடி,#கொண்டாட்டம்