இன்று நடைபயிற்சி செய்யும் பூங்காவில் 70 வயது முதியவர்கள் தங்களுக்குள் கிசுகிசுவென பேசிக்கொண்டது கேட்க முடிந்தது, தாய்லாந்து பேங்காக் 6 நாட்கள் சுற்றுலா அழைத்துப் போய் phat pong பஜாரில் அறை எடுத்து தங்க வைப்பதாகவும் அன்லிமிட்டட் sandwich மசாஜ் என்று சபலமூட்டி சுமார் இருபது வயசன்மார்களிடம் தலா பத்தாயிரம் முன்பணம் மற்றும் பாஸ்போர்ட் தகவல்களை வசூலித்துக் கொண்டு ஒருவன் கம்பி நீட்டியிருக்கிறான்,
பேங்காக் டூர் என்ற வாட்ஸப் க்ரூப் ஒன்று துவங்கி அதில் தாய் அழகிகளின் படங்களைப் பகிர்ந்து இவர்களை கொத்தாக சேர்த்து வலையில் விழ வைத்துள்ளான், அத்தனை வயசன்மாருக்கும் திருடனுக்கு தேள் கொட்டியது போன்ற நிலை,தாங்கள் சபலத்தால் ஏமாந்ததை வெளியே பகிர்ந்தாலும் அசிங்கம், பலரும் கூலர்ஸ், புதிய ஹவாய் சட்டை பூபோட்ட பெர்முடா ஷார்ட்ஸ் எல்லாம் கூட வாங்கிவிட்டனராம், ஃப்ரெஞ்ச் தாடி, காதில் ஒற்றைக் கடுக்கன்,சிலர் தலையில் காரக்குழம்பு என பேங்காக் போக முடி திருத்தியவர்கள் கலவரமாகக் காணப்பட்டனர் , அத்தனை பேரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்,அதில் பலரும் ஹீலர் கவாஸ்கரை பின்பற்றுபவர்கள், தினம் ஒரு கஷாயம் செய்து குடிப்பார்கள், யோகம் பயிலுபவர்கள், கண்ணுக்கு மூலிகை சொட்டு மருந்து விட்டுக்கொள்பவர்கள், பாதி பேர் பைபாஸ் ஆபரேஷன் செய்தவர்கள், cataract ஆபரேஷன் கண்ணில் செய்தவர்கள் ,hernia ஆபரேஷன் செய்து வயிற்றில் mesh வைத்து நடப்பவர்கள், அவர்கள் கும்பலாக நடக்கையில் health conditions காற்றில் பகிர்ந்ததால் இவற்றை அறிவேன்.
இவர்கள் பேங்காக் டூர் போவதை எப்படி வீட்டில் வெளிப்படையாக பகிர்வார்கள்?நம் சமூகத்தில் அதற்கு புரிதல் உள்ளதா? எப்படி மனைவியிடம் அனுமதி வாங்குவார்கள்? அங்கே போய் என்ன செய்தீர்கள்? என்று வீட்டார் யாராவது கேட்டால் என்ன சொல்வார்கள் எனப் புரியவில்லை, .