அமெரிக்காவில் 1900களில் இந்த பாம்புத்தைலம் [அதுவும் இந்தியப் பாம்பு தைலம்] விற்பனை சக்கை போடு போட்டிருக்கிறது,நம் ஊர் உடும்புத் தைலத்தை காப்பி அடித்திருப்பார்கள் போலிருக்கிறது,
நம்மூர் மண்ணுளிப் பாம்பு மோசடி போல அமெரிக்காவில் பாம்புத்தைலத்தை மார்கெட்டிங் செய்து ஜகஜால ஃப்ராடு செய்திருக்கின்றனர் எனத் தெரிகிறது,
இப்போது இது போன்ற ஈஸி மனி செய்யும் மோசடிக்கு அதிகம் பேர் மயங்குவதில்லை,ஒரே வார்த்தையில் இது ஸ்நேக் ஆயில் மோசடி !!! என்று நகைத்து ஒதுக்கிவிடுகிறார்களாம்,இதை ஃப்ராஞ்ச் ஆயில் எங்கேப்பா!!! என்பது போல எல்லா வகை ரோகத்துக்கும் உபயோகித்துள்ளனர். அதில் அதிக கவனம் தேவைப்படுபவர்களுக்கு ஸ்நேக் ஆயில் சோப்பையும் விற்று ஏய்த்திருக்கின்றனர் பாருங்கள். இந்த ஸ்நேக் ஆயில் ராட்டில் ஸ்நேக் என்னும் பாம்பு இனத்திலிருந்து இந்தியப் பாரம்பரிய முறைப்படி தயாரித்தனராம்!!!
கண் பார்வைக் குறைபாட்டிற்கு கூட இத்தைலத்தை உபயோகித்துள்ளனர் பாருங்கள்,அவ்வளவு ஏன் கற்பனை வியாதியான bowdens malady என்னும் வியாதிக்கு கூட இதை பரிந்துரை செய்துள்ளனர் http://en.wikipedia.org/wiki/List_of_fictional_diseases
http://en.wikipedia.org/wiki/Snake_oil