நடிகர் ஓம்புரியும் கமல்ஹாசனும் அண்ணன் தம்பி போன்ற அன்னியோன்யம் கொண்டவர்களாம், எத்தனை பெரிய நடிகர் இவர்? கமல்ஹாசன் இவரைத் தம்பி என்றே அழைப்பாராம், ஓம்புரிக்கும் அப்படி அழைத்தால் தான் பிடிக்குமாம்.
புஷ்பக் (பேசும் படம் )படம் பார்த்து விட்டு மிகவும் சிலாகித்த நடிகர் அம்ஜத்கானும் ஒம்புரியும் ஆளுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினராம், கமல்ஹாசன் இன்றும் அந்தக் கடிதங்களை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறாராம்,
ஆனால் அக்கடிதங்களுக்கு நன்றி கூறி இருவருக்கும் இவர் மறுமொழி எழுதவில்லையாம், இதனால் கோபித்த ஓம்புரி கமல்ஹாசனை chachi 420 படத்தில் டெல்லி கணேஷ் செய்த மேனேஜர் கதாபாத்திரத்தில் நடிக்கையில் கேட்டே விட்டாராம், கமல்ஹாசன் சொன்னாராம், அந்த கடிதத்துக்கு ஈடாக என்ன வார்த்தை? போட்டு என்ன மறுமொழி எழுதுவது?
என்று அவரை சமாதானப்படுத்த வேண்டி
"I will make you my brother" என்றாராம், உடனே counter தந்தாராம் ஓம்புரி, நீங்கள் பெரிய ஸ்டார், என்னை Uncle ஆக்கப் பார்க்கிறீர்கள்,எனக்கு அதெல்லாம் வேண்டாம் என்றிருக்கிறார்,
கமல்ஹாசன் சரி அப்படியானால் நான் உங்களை என் தம்பியாக ஏற்கிறேன், தம்பி என்றால் தமிழில் "little brother "என்று அர்த்தம் என விளக்க,
அவர் சந்தோஷமாகிவிட்டாராம்,அது முதலே கமல்ஹாசனுக்கு ஓம்புரி தம்பி ஆகிவிட்டாராம்.
ஹேராமில் இந்த மும்பை தொழிலதிபர் சுபாஷ் கோயல் பாத்திரத்தில் அவராகவே ஹேராமில் எனக்கு எங்கே கதாபாத்திரம் ?! என உரிமையுடன் கேட்டு வாங்கி நடித்தாராம்,
கோயல் மகாத்மாவின் உற்ற நண்பர், அவர்தான் மகாத்மாவுக்கு உப்பிலியை , சாகேத்ராமை, அம்ஜத் அம்மா,அம்ஜத் மனைவி என அறிமுகம் செய்து வைப்பார்.
நாதுராம் கோட்சே மகாத்மாவை மூன்று முறை சுட்ட பின் கோயல் தான் கோட்சேவை தொண்டர் கூட்டம் அடித்துக் கொல்லாமல் காப்பாற்றுவார், "no violence this is the moment of truth" என்று தொடர்ந்து கதறிய படியே நாதுராம் கோட்சேவைப் பாதுகாத்து போலீசிடம் ஒப்படைப்பார்.
#ஹேராம், #சுபாஷ்_கோயல், #சாகேத்ராம்,#ஓம்புரி