நடிகர் வடிவேலுவுக்கு சிறந்த பொழுதுபோக்கு ஆளுமை பிரிவில் அண்ணா பல்கலைகழகம் முன்வந்து தருவது போல டாக்டர் பட்டம் தந்து மோசடி செய்துள்ளனர், சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் போலியான டாக்டர் பட்டங்களை
அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரையை சட்டவிரோதமாக அந்த
சான்றிதழுக்கு இந்த மோசடியாளர்கள் பயன்படுத்தி உள்ளனர்,
வடிவேலுவுடன் சேர்த்து எதுவும் சாதித்திடாத இரண்டு உப்புமா நடிகர்களுக்கும் கூட மேடையில் டாக்டர் பட்டம் தந்துள்ளனர் இந்த சதுரங்கவேட்டை பாணி மோசடியாளர்கள்,
வடிவேலு மதுரைக்காரர் , தெளிவானவர் என்று பார்த்தால் இப்படி வசமாக சிக்கியிருக்கிறார், சிரிப்பாய் சிரிக்கிறது டாக்டர் பட்டம்,இப்படி முகாந்திரமில்லாத போலிகளிடம் இந்த பட்டத்தை பெறுவதற்கு பதிலாக சத்யபாமா போன்ற நிகர்நிலை பல்கலையிடம் கூட பணம் தந்து இந்த கௌரவத்தை வாங்கியிருக்கலாம் நடிகர் வடிவேலு.
இப்படி தேரை இழுத்து தெருவில் விட்டுள்ளனர், இந்த மோசடியாளர்கள் பட்டமளிப்பு விழா முடிந்தவுடன் சிம்கார்டை களைந்து விட்டு தலைமறைவாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சி சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் தனியார் கோவில் நிர்வாகிகள், ரியல் எஸ்டேட் அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் என 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனராம், மேலும் இசையமைப்பாளர் தேவா, ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.
மாண்பும் மாட்சிமையும் மிகுந்த அண்ணா பல்கலைக்கழகம் இப்படி சதுரங்க வேட்டை மோசடிக்கு பலியாகி சந்தி சிரிப்பது வேதனை அளிக்கிறது , பெருமைமிகு பட்டமளிப்பு மண்டபத்தை நாள் வாடகை விட்டுள்ளனர் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் , விதை நெல்லை விற்று உழவன் சாப்பிடுவது போன்ற அவலம் இது.
இந்த சிரிப்பு முனைவர் பட்டமளிப்பு விழா பற்றி இங்கே விரிவாக படிக்கலாம்.