போன வாரம் என் பெட்ரோல் வண்டி ஜூபிடரை இவர்களிடம் சர்வீஸுக்கு தந்தேன், வீட்டுக்கு வந்து எடுத்து போனார்கள் ,வீட்டுக்கு வந்து விட்டுப் போனார்கள் ,
ஒரு LED head lamp bulb மாற்றினார்கள், ஒரு Air filter மாற்றினார்கள், engine oil மாற்றினார்கள், 1750₹ கட்டணம்.
வண்டியை எப்படி எடுத்துப் போனார்களோ அப்படியே கொண்டு வந்து விட்டது போல உள்ளது, வாட்டர் வாஷ் செய்யவில்லை, (வாட்டர் வாஷ் செய்தால் Helmet வைக்கும் boot space சுத்தமாகவும் சற்று ஈரமாகவும் இருக்கும் அதை வைத்து அறியலாம்) மாறாக பாலீஷ் போட்டுள்ளனர், odometer panel , ஹெட்லைட் கண்ணாடி, ரியர் வியூ மிரர் கண்ணாடி மீது எல்லாம் மங்கலாக பாலீஷ், floor mat மீது grease கறை என கந்தரகோலம்.
வண்டியை இஞ்சின் ட்யூன் செய்யவேயில்லை,ஒரே உறுமல், க்ளட்ச் ஓவர்ஹாயிலிங் செய்யவில்லை, வண்டியில் பிக்கப் அறவே இல்லை , வண்டி அத்தனை rough ஆக உள்ளது, வண்டியில் மாற்றிய பழைய உதிரி பாகம் எதையும் நம்பிக்கைக்கு வேண்டி கூட தந்து விடவில்லை.
எனவே இவர்களிடம் நீங்கள் வண்டி தந்து ஏமாறாதீர்கள், இவர்கள் 3999₹ க்கு கார் சர்வீஸும் செய்கின்றனராம்,
பைக்கிற்கு999₹ சர்வீஸ் என்று 1750₹ பில் தருகிறவர்கள், எனவே வலையில் சிக்காதீர்கள்.
வண்டியை எடுத்து கொண்டு போய் விட்டு எடுத்து வர சோம்பேறித்தனப்பட்டு மன உளைச்சல் நேர விரயம் என இரட்டை வேலை, என் வண்டியை வழக்கமான விடும் TVS சர்வீஸ் சென்டரில் அடுத்த மாதம் கொண்டு போய் விடவேண்டும்.
இந்த நிறுவனம் TVS பார்ட்னர் என விளம்பரம் செய்து மோசடி வலைவிரிக்கின்றனர்,ஆனால் இவர்கள் TVS இலச்சினையை வைத்து ஏமாற்றி வாடிக்கையாளர்களிடம் ஜேப்படி அடிப்பதே உண்மை, அதிக கவனம் கொள்ளுங்கள்.
TVS நிறுவனத்தின் பெயரை அதே கருநீலம் மற்றும் ஆரஞ்சு வர்ணங்களை வைத்து கண்கட்டிவித்தை லோகோ செய்தவர்கள், மோடியின் இந்த டிஜிட்டல் இந்தியாவில் சுரண்டக் கிளம்பியிருக்கிறார்கள் , அசல் TVS நிறுவனத்துக்கும் இவர்களுக்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது, இரண்டு logo வையும் உற்றுப் பாருங்கள், உண்மை விளங்கும், சிக்கியவர்கள் வாய் பொத்தி கதறுவார்கள்,ஆனால் வெளியில் பகிர மாட்டார்கள், எனவே யாரும் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
GoBumpr