உங்கள் வீட்டின் toilet சுவரின்
நான்கு மூலைகளை முடிந்த வரை இது போல functional ஆக உபயோகியுங்கள்,
இது போல எஞ்சிய கிரானைட் அல்லது மார்பிள் கால் வட்ட கற்பலகங்கள் பல நிறங்களில் அருகாமையிலுள்ள கடப்பா , கிரானைட் ,மார்பிள் கடைகளில் கிடைக்கிறது,உங்கள் டைல்ஸ் வண்ணத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுங்கள்.
இவற்றை துண்டு கற்பலகங்களில் இருந்து தயாரிப்பதால் இதன் ஒன்றின் விலை 120₹ தான், டைல்ஸ் ஒட்டும் முன்னர் இதை நீங்களே வாங்கித் தந்து விட்டால் சுவற்றின் மூலையில் cutting machine கொண்டு காடி எடுத்து ஏழடி உயரத்தில் அமைத்து அழகாக white cement கொண்டு finish செய்து விடுவார்கள்,இந்த corner shelf காலத்திற்கும் உறுதியாக இருக்கும்.
உங்கள் toilet எத்தனை சிறியதாக இருந்தாலும் இது போல மூலைகளை சரியாக பயன்படுத்துகையில் அங்கு இடப்பற்றாக்குறையே இருக்காது.
இதே போல உங்கள் kitchen மற்றும் மற்ற அறைகளிலும் ஒரு அடி உயர இடை வெளி விட்டு உங்கள் தேவைக்கேற்ப corner shelf அமைக்க முடியும்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
#corner_shelf,#granite_shelf,#semi_circular_shelf,#corner_shelf,#sustainable_construction