பொம்மை 1964 திரைப்படத்தில் இந்த ஆக்ஷாகானா என்ற கத்திபாராவில் ஜோதி தியேட்டரை தொட்டடுத்து வீற்றிருக்கும் cenotaph நினைவுச்சின்னம் கூட வருகிறது, அது அன்று பேருந்து நிறுத்தமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.
சில புராதான கட்டிடங்கள் நினைவுச் சின்னங்கள் தம் அமைவிடத்தை நிரந்தரமாக தேர்வு செய்து வீற்றிருக்கின்றன, யார் நினைத்தாலும் அதை மாற்றவோ அகற்றவோ முடியாது, அது போல ஒரு நினைவுச் சின்னம் இந்த
Lt Col. Sam Dalrymple of Madras Artillery: Cenotaph near Kathipara Junction.
நம் சமகால சர்வதேச புகழ்பெற்ற இங்கிலாந்து எழுத்தாளர் William Dalrymple அவர்களின் மூதாதையர், மறைந்த Lt Col. Sam Dalrymple என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை கத்திபாரா மேம்பாலத்தில் ஓரம்கட்டி சில படங்கள் எடுத்தேன்,இணைப்பில் பாருங்கள், வரலாற்று நினைவுச் சின்னம் எப்படி சீரழிந்து வருகிறது என்று பாருங்கள், தரை பிளந்து, தூண்களில் பூச்சு உதிர்ந்து செங்கற்கள் தெரியத் துவங்கிவிட்டன, அஸ்தி அடங்கிய மேடை பெயர்ந்து போய் உள்ளது.
இந்த நினைவுச் சின்னம் கத்திபாரா மேம்பாலம் கட்டப்படுகையில் இடிக்கப்படாமல் தப்பிய கதை இங்கே எழுதியுள்ளேன்.