இன்று காலை வண்டி சர்வீஸ் விட்டு நடைபயிற்சியில் வருகையில் கண்டது, இழப்பதற்கு எதுவுமில்லை, எதனிடத்திலும் பயமில்லை என்னும் மோனநிலையில் ஒரு மதுப்பிரியர் உறங்குவதைப் பாருங்கள்,அருகே இந்த மதுக்குப்பி சற்றுத் தள்ளி அட்டைப் பெட்டிகள், இதன் மூலம் தான் குடிப்பது ஒரிஜினல் என்று நம்பி குடிக்க வழிவகை செய்துள்ளனர்.
துவக்க விலை ரசாயன மது குவார்டர் பாட்டில்கள் கூட ஏழை மதுப்பிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக அட்டைப்பெட்டியில் அடைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது,
மதுப்பிரியர்களை மேலும் ஊக்குவிக்க இந்த அட்டைப் பெட்டிக்குள் surprise gift ஆக air pillow, odomos gel இவற்றை வைத்தால் மதுப்பிரியர்கள் சாலையில் மட்டையாகி உறங்குகையில் comfort ஆக உறங்க மிகுந்த உதவியாக இருக்கும்,
இதை யாரேனும் யோசனையாக அந்த b-grade distilleries நிறுவன மார்க்கெட்டிங் மேலாளர்களுக்கு சொன்னால் புண்ணியமாக போகும்.
எதையும் நம்மால் இங்கே மாற்ற முடியாத சூழ்நிலையில் அதை மகிழ்ச்சியான தரமான தருணமாக மாற்றுவதே சிறந்த வழி,
" Always Look on the Bright Side of Life"