இது பல்லாவரம் பெரிய ஏரி , இந்த 200அடி ரேடியல் சாலை இந்த ஏரியின் நடுவே வகுந்து செல்கிறது, ஒரு புறம் முழுக்க ஏரியின் நீர் நிலை, மறுபுறம் பாதி ஏரியின் நீர்நிலை, பாதி குப்பை கிடங்கு மலை, ஆமாம் குப்பை மலை தான்.அந்த குப்பைக் கிடங்கிற்கு அருகில் ஐநூறுக்கும் மேற்பட்ட மேல்தட்டு குடியிருப்பு அடுக்ககங்கள்.
சமீபத்தில் பெய்த மழையில் ஏரி நன்கு நிரம்பியுள்ளது, இந்த ஏரியைச் சுற்றிலும் மூன்று ராட்சத அடுக்குமாடி அடுக்ககங்கள், அதில் ஐநூறுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
இந்த அடுக்ககத்தின் ஜன்னல்கள் ஏரியை மற்றும் பார்க்கவில்லை, அதன் மறு கரையில் இருக்கும் பிரம்மாண்டமான குப்பை கிடங்கையும் பார்க்கின்றன,அது அடிக்கடி தீப்பிடிக்கையில் எழும் கரும்புகை, குடலைப் பிடுங்கும் துர்நாற்றம், ராட்சத ஈக்கள், மாடு போல நோய்பரப்பும் கொசுக்கள், மேயும் பன்றிகள், நாய்கள்,காக்கைகள் குப்பையை கிளறும் JCB எந்திரம் என happening place.
அடுக்ககம் சதுரஅடி
6000 ₹ plus க்கு வாங்கும் மக்களுக்கு இது எத்தனை நல்ல இயற்கை எழில் கொஞ்சும் காட்சியாக இருக்கும் ? என்று நினைத்துப் பாருங்கள்.
சமூக அவலம் என்றால் இது தான்,கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பது போல இத்தனை பிரம்மாண்ட குப்பை கிடங்கின் அருகே விருப்பத்துடன் இத்தனை அடுக்ககங்கள் எழும்பியதா? அல்லது இந்த அடுக்ககங்களின் அருகே இத்தனை பிரம்மாண்ட குப்பை கிடங்கு வந்ததா? என்பது,
அங்கீகாரம் தந்த அரசு அதிகாரிகளின் அலட்சிய மனோபாவம், கட்டுமானர்களின் பேராசை என விளைந்த பேரவலம் இது.
PS: அடுக்ககத்தில் வீடு வாங்குபவர்கள் குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் broture பார்த்து மட்டும் வாங்காதீர்கள், நீங்கள் வாங்கப்போகும் அடுக்கக வீட்டை walk in செய்யுங்கள், உங்கள் நடுவீட்டில் இருந்து சுடுகாடு தெரிகிறதா? குப்பைமேடு தெரிகிறதா? என பார்த்து வாங்குங்கள்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#picture_perfect,#a_room_with_a_view