மாணவர் மஞ்சரி என்பது நூலகம், மாலை பயிற்சி வகுப்பு, அரசுப் பணி போட்டித்தேர்வு வழிகாட்டி ,என பலநோக்கு கொண்ட அமைப்பு, சென்னையின் குடிசைப்பகுதிகளில் ஏழை ஆதி திராவிடர் மாணவர்களின் மேம்பாட்டுக்கு உதவிய இயக்கம் இது,
சார்பட்டாவில் "வானம் விடிஞ்சிருச்சு காசுடா மோளத்த " இந்தப் பாடலில் இந்த மாணவர் மஞ்சரி பெயரை காட்டியிருக்கிறார் இயக்குனர் .
அரசுப் பள்ளிக்கு வந்து இவர்கள் ஆதிதிராவிட மாணவர்களுக்கு அம்பேத்கர் அறிவியல் கைட், தமிழ் கைட், கணித கைட் என ஒவ்வொரு வருடமும் இலவசமாக தருவார்கள், குடிசைப்பகுதி மாணவர்கள் ஒருவரும் வீணாகாமல் ஹார்பர், ரயில்வே, ஐசிஃப், காவல்துறை , விளையாட்டு கல்வி என முன்னேற இதன் தன்வார்வலர்கள் அறிவுரை வழங்குவார்கள், இதை எல்லாம் அழகாக ஒரு தமிழ்ப்படத்தில் ஆவணப்படுத்தியது வியப்பளிக்கிறது.