சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே ஓடிய உள்ள எலக்ட்ரிக் டிராமின் 1930ஆம் ஆண்டு எடுத்த அரிய புகைப்படம் பாருங்கள்.
மெட்ராஸ் டிராம்வே 1895 இல் தன் சேவையைத் தொடங்கியது, இது இந்தியாவில் முதல் மின்சாரத்தில் இயக்கப்படும் டிராம்வே ஆகும், இதன் பணிமனை பெரியமேடில் தினத்தந்தி அலுவலகம் மற்றும் திராவிடர் கழக தலைமை அலுவலகம் இயங்கும் அந்த இடத்தில் தான் 58 ஆண்டுகளாக இயங்கி வந்தது.
1904 ஆம் ஆண்டு வாக்கில் அது சென்னையில் 24 கிமீ வரை தனது சேவையை விரிவுபடுத்தியது , மேலும் மேலும் ட்ராம் கார்கள் புதிதாகவும் சேர்க்கப்பட்டன.
அதன் பயண வேகம் மணிக்கு 7 கிமீக்கு மேல் இருந்தது இல்லை, இதனால் பயணிகள் ட்ராம் ஓடுகையில் ஏறவோ அல்லது இறங்கவோ முடியும்.
58 ஆண்டுகளில் ட்ராம் பயணச்சீட்டுகள் பெயரளவுக்கு மட்டுமே விலையேற்றப்பட்டன, இந்த போக்குவரத்தைப் பயன்படுத்திய பயணிகளின் மொத்த எண்ணிக்கை தினசரி 1,20,000 ஆக இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக, நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவுகள் விரைவாக சிதைந்தன,பலமாதங்கள் சம்பள பாக்கி, உள்ளிருப்பு போராட்டம்,
நிதிப் பிரச்சனைகளுடன் சேர்ந்ததால் சென்னை நகரின் ஒரு காலத்தில் புகழ்பெற்ற பிரதான போக்குவரத்தை மூடுவதைத் தவிர வேறு வழியிருந்திருக்கவில்லை.
பல ஆண்டுகாலம் கொடிகட்டிப் பறந்த இந்த ட்ராம் போக்குவரத்து நிறுவனத்தை மீட்டெடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், 1953 இல் அது நிரந்தரமாக மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இன்றும் 80 வயது சென்னைவாசி முதியவர்கள், ஒரு காலத்தில் சென்னையில் கோலோச்சிய டிராமின் பொற்காலத்தை ஏக்கத்துடன் நினைவில் வைத்திருக்கிறார்கள்,
குறிப்பாக டிங் டிங் என்ற அதன் மணி முழக்கத்துடன் சாலையில் பயணித்ததை நினைவு கூறுவர். இணைப்பு படத்தில் அண்ணாசாலை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர் அருகே ஒயிலாக திரும்பும் ட்ராம் பாருங்கள், அதன் மீது அப்ரூ என்ற ப்ராண்ட் விளம்பரம் பாருங்கள்.
நகை முரணாக இது 1895 இல் தொடங்கப்பட்டபோது, மக்கள் அதை வேகமானதாகவும் பாதுகாப்பற்றதாகவும் கருதினர் மற்றும் சிறிது நேரம் கூட அதில் பயணம் செய்ய மக்கள் பயந்து மறுத்தனராம்..