அமெரிக்காவின் ப்ளே பாய் பத்திரிக்கை போல இந்தியாவுக்கு டெபோனேர் பத்திரிக்கை, சாஃப்ட் போர்ன் வகையரா பத்திரிக்கை, இந்த ஆண்களுக்கான இதழ், 1974 ஆம் ஆண்டு முதல் வருகிறது, அதன் நடுப்பக்கம் மிகுந்த பிரசித்தி பெற்றது,
லோக்கல் ட்ரெய்னில் ஃபர்ஸ்ட் க்ளாஸ் கம்பார்ட்மென்ட் என்று ஒரு காலிப் பெட்டி இருக்கும், அதில் பயணிக்கும் மக்கள் , இதை ரயில்வே ஸ்டேஷன் புத்தகக் கடையில் நாசூக்காக வாங்கிச் செல்வதைப் பார்த்துள்ளேன்,90 களிலேயே 50 ரூபாய், யாரும் ஓசியில் பார்க்க இயலாதபடிக்கு பின் அடிப்பார்கள், பின்னர் கவரில் அடைத்து வந்தது
பழைய பேப்பர் கடைகளில் கூட தீயாய் விற்கும் பத்திரிக்கை இது, இதில் நடுப்பக்க அரை நிர்வாண மாடல்கள் படங்கள் , உலகத்தரம் கொண்ட மினிமலிஸத்தில் இருக்கும்,வண்ணத்திரை , சினிக்கூத்து போன்ற தரைலோக்கல்கள் நெருங்க முடியாத தரம், குவாலிட்டி, பிக்ஸல்கள்
அதற்கு இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்களான அட்ரியன் ஸ்டீவன், கிஷோர் பரேக், ஜிதேந்திரா ஆர்யா, தயாராம் சௌதா போன்றவர்கள் மாடல்களைப் படமெடுக்க காத்திருப்பதாக வந்த அறைகூவல் விளம்பரம் இது,
என்ன தான் இந்தியா கலாசாரம் பண்பாடு அது இது என தலைகீழாக தண்ணீர் குடித்தாலும் ஹை சொசைட்டி மட்டுமே மீறக்கூடிய இது போல சில நேமங்கள் இருக்கின்றன.
இந்த ந்யூட் மாடல்கள் பற்றி இந்தியா டுடே செய்த கவர் ஸ்டோரி இது,அவசியம் படியுங்கள்