இன்று காலை எனக்கு whatsapp ல் வந்த ஒரு குறுஞ்செய்தியின் சுருக்கம்,
நான் ஒரு BE படித்த MEP cad engineer , Stup consultants Escs MNC போன்ற பெருமைமிகு நிறுவனங்களில் வேலை செய்துள்ளேன், எனக்கு ஆறுமாதத்துக்கு மேலாக வேலையில்லை , எனவே zomato ல் டெலிவரி பார்ட்னராக வேலைக்கு சேர்ந்தேன், வீட்டு கஷ்டத்தில் நான் zomato விற்கு திருப்பி செலுத்த வேண்டிய தொகை 1740₹ ஐ செலவு செய்துவிட்டதால் திருப்பி செலுத்த முடியவில்லை, இன்று இரவுக்குள் எனக்கு அந்த தொகையை செலுத்த முடியாவிட்டால் என் delivery partner ID ஐ அவர்கள் block செய்யக்கூடும், ஏற்கனவே எனக்கு 20 நாட்களாக இந்த நிலுவைத் தொகையால் எந்த ஆர்டரும் zomato தருவதில்லை, நாளை முதல் நான் இந்த வேலையுமிழந்து விடுவேன், என் குடும்பத்தில் மளிகை சாமான்கள் கூட இல்லாத நிலை, எனக்கு நீங்கள் ஏதாவது வேலை தந்தால் அதை எட்டு மணிநேரத்தில் செய்து தந்து 1700₹ பணத்தை பெற்றுக் கொண்டு zomato விற்கு செலுத்தி என் delivery partner வேலையை தக்க வைத்துக் கொள்வேன், எனக்கு ஏதேனும் வேலை தந்து உதவவும், என்னை தயவு செய்து block செய்யாதீர்கள். என் ஆவணங்களைப் சரிபார்த்து வேலை தரவும்.
இன்று zomato , swiggy நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கண்ணீர்கதையின் ஒரு உதாரணம் இது,
நான் இதுவரை எந்த zomato , swiggy லும் எதுவும் ஆர்டர் செய்ததில்லை, ஆர்டர் செய்பவர்கள் வாய்ப்பிருந்தால் அவர்களின் பின்னணியை கேட்டு நீங்கள் அதே துறையில் இருந்தால் உதவ முடியும் பட்சத்தில் கைதூக்கி விடவும்,பண உதவி செய்வது பலனற்றது, வேலைக்கு அல்லது படிப்புக்கு என அவர்கள் எதிர்காலத்துக்கு செய்யும் உதவியே நிலையானது, பசித்தவனுக்கு மீனை தருவதை விட மீனை பிடிக்க கற்றுக்கொடுப்பதன் அர்த்தம் அதுவே.
Pay it Forward நியதி இந்த உலகை தொடர்ந்து இயக்குகிறது என்பது உண்மை,நீங்கள் ஒரு நபரின் கருணை மனுவுக்கு பதிலளிப்பதன் மூலம் இந்த மாபெரும் சமூகத்துக்கே கருணை காட்டுகிறீர்கள் எனக்கொள்க.
உதவி பெற்றவர் அந்த உதவியின் பயனை அடைந்து மற்றொரு உதவி கோருபவருக்கு எதிர்காலத்தில் உதவுவதன் மூலம் திருப்பிச் செலுத்துகிறார் என்பது திண்ணம்.