பேராசிரியர் ரங்கசாமி நரசிம்மன் இந்தியாவில் கணினி அறிவியல் துறையில் முன்னோடியாவார், இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரான கணினி TIFRAC இன் முதன்மை வடிவமைப்பாளர் இவர்.
TIFRAC என்பது Tata Institute of Fundamental Research Automatic Calculator என்பதன் சுருக்கமாகும்
TIFRAC மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட முதல் கணினி , 1950 ஆம் ஆண்டு தொடர் ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு முதலில் இயக்கப்பட்டது.
இப்புகைப்படத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஹோமி பாபா ஆகியோர் உள்ளனர், பேராசிரியர் ரங்கசாமி நரசிம்மன் முதல் இந்திய டிஜிட்டல் கணினியை ஜவஹர்லால் நேரு மற்றும் ஹோமி ஜே. பாபா ஆகியோருக்கு டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச்சில் இயக்கி காட்டும் தருணம் இது.
TIFRAC குறைந்தபட்ச வன்பொருளையே (hardwares) கொண்டிருந்தது, முக்கியமாக அதன் CPU ஒவ்வொன்றும் 40 பிட்கள் கொண்ட 1024 வார்த்தைகள் நினைவகத்தை கொண்டிருந்தது. காகித நாடா (paper tape )உள்ளீடு மற்றும் டெலிபிரிண்டர் மட்டுமே வெளியீட்டு சாதனமாக கொண்டிருந்தது.
இதன் அடிப்படை மென்பொருள் bootstrap மற்றும் ஒரு
ஒரு சில துணை நிரல்களின் பயனர் நிரல்களையும் library ல் சேமிப்பதற்கான எளிய நிரல் கொண்டது . இதன் நிரல் உருவாக்கம் (program development) சிக்கலானது மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்வதாக இருந்தது.
TIFRACக்கு நல்ல குளிர்சாதன வசதி தேவைப்பட்டது. அறையின் தட்பவெப்பம் 20° க்கு குறைகையில் அதன் வன்பொருளில் தொடர்பு சிக்கல்கள் எழுந்தன.
கல்வி நோக்கத்திற்காக கணினிகளைப் பயன்படுத்தவும் நாட்டில் கணினி பயன்பாட்டிற்கும் TIFRAC ஒரு நல்ல தொடக்க புள்ளியாக இருந்தது.
அப்போது IBM இந்தியாவில் கணினி சந்தையில் நுழைந்திருந்தது, முக்கியமாக வணிக பயன்பாட்டிற்கான கணினி சந்தையில் நுழைந்திருந்தது, IBM1401 என்பது முதல் வணிக கணினி ஆகும் , IBM1620 என்பது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கல்வி கணினி ஆகும் .
TIFRAC ற்கு முக்கிய பயனர்கள் கல்வி சார்ந்தவர்கள் ஆவர். TIFRன் காஸ்மிக் ரே பிரிவு, மெட்ராஸ் பல்கலைக்கழகம், ISI-பெங்களூர், மற்றும் மத்திய நீர் மற்றும் சக்தி ஆராய்ச்சி (CWPR) புனே வை குறிப்பிடலாம்.
இந்தியாவில் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பீஷ்மர் என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஆர் நரசிம்மன் (1926-2007) ஆரம்ப கட்டங்களில் இந்தியாவில் கணினி அறிவியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
1947 ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் தொலைத்தொடர்புப் பொறியியலில் பட்டம் பெற்ற பின், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் எம்எஸ் பட்டம் பெற்று இந்தியானா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலைப் ஆராய்ச்சி பணிக்காக சென்றார்.
1954 ஆம் ஆண்டு டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) பாம்பேயில் இணைந்தார். அவர் முப்பத்தாறு ஆண்டுகள் TIFR இல் பணியாற்றினார், 1990 ஆம் ஆண்டு எமினென்ஸ் பேராசிரியராக ஓய்வு பெற்றார்.
1954-1960 காலகட்டத்தில், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் ஆட்டோமேட்டிக் கால்குலேட்டரை (TIFRAC) வடிவமைத்து கட்டமைத்த குழுவை அவர் முன்னின்று வழிநடத்தினார்,
இந்தியாவில் செயல்பாட்டிற்கு வந்த முதல் மின்னணு டிஜிட்டல் கணினி மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
டாக்டர். நரசிம்மன் தனது கல்வி வாழ்க்கையின் பெரும்பகுதியை TIFR இல் செலவிட்டார், நிறுவனத்தின் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தை உருவாக்கினார்.
பேராசிரியர் ஆர் நரசிம்மன் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியாவை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார் , அதன் முதல் தலைவராக பணியாற்றினார்.
பேராசிரியர் நரசிம்மன் கணினி பராமரிப்புக் கழகம் (CMC) அமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
பேராசிரியர். ஆர். நரசிம்மன் தலைமையில், TIFR-க்குள் ஒரு தன்னாட்சிப் பிரிவு, மென்பொருள் மேம்பாடு மற்றும் கணினி நுட்பங்களுக்கான தேசிய மையம் (NCSDCT) உருவாக்கப்பட்டது.
இந்த பிரிவின் இயக்குநராக பேராசிரியர் நரசிம்மன் இருந்தார். இந்திய அரசின் மின்னணுவியல் துறைக்கு பல்வேறு வழிகளில் ஆலோசகராகப் பணியாற்றினார்.
கணினி தொழில்நுட்பம் மற்றும் வடிவ அங்கீகாரம் ஆகியவற்றில் அவர் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
அவர் Syntax pattern recognition பகுதியில் பணிக்கு முன்னோடியாக இருந்தார். அவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில், அவர் Manners and behavior அறிவியலின் ஆய்வுக்கு அமைப்பு-கோட்பாட்டு கருத்துக்கள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு தன்னை அற்பணித்தார்.
சமூக-பொருளாதார செயலாக்கம், Modeling language behavior, அறிவியலின் பங்கு ஆகியவற்றில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு சமூக மாற்றம் மற்றும் தொழில்நுட்ப கொள்கை சிக்கல்கள் பற்றிய தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
பேராசிரியர். நரசிம்மன் தகவல் செயலாக்கத்திற்கான சர்வதேச கூட்டமைப்பு கவுன்சிலின் இந்தியப் பிரதிநிதியாக இருந்தார் (1975-86);
உறுப்பினர், அறிவியல் ஆலோசனைக் குழு, மேம்பட்ட ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான இந்தோ-பிரெஞ்சு மையம் (1988-90).
பேராசிரியர் நரசிம்மன் ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் (1971-73) பெற்றவர்;
ஹோமி ஜே. பாபா விருது (யுஜிசி)
(1976);
ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை விருது
(1988) மற்றும் பத்மஸ்ரீ விருது(1976).
இந்திய அறிவியல் அகாடமி விருது,
பெங்களூர், கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா விருது.
அலகாபாத் தேசிய அறிவியல் அகாடமி விருது.