நேற்று மார்கழி 1 , எங்கள் வீட்டு சுவாமி படங்கள் மீது மாட்டி இருந்த தாமரை மணி மாலைகள் அத்தனையையும் கழற்றி வேப்ப எண்ணெய் அரைலிட்டர் (180₹) ஆயில் மில்லில் வாங்கி வந்து அகண்ட பேஸினில் கொட்டி ஊறவைத்துள்ளேன், இதன் மூலம் தாமரை மணி மாலைகளின் உள்ளே இருக்கும் சுவையான விதையை தின்ன மிகச்சிறிய வெள்ளை எறும்புகள் படையெடுக்கும், சக்தி மிகுந்த எறும்புகள் மணிகளை துளைத்து அரித்து தின்றுவிடும்,மாலை முழுக்க சிறு வெண் புள்ளிகளாக விதையின் தூசு படிந்து விடும், தாமரை மணிகளை நூலில் கட்டியிருந்தால் அது டெஃப்லான் நூலானாலும் கூட அரித்து மாலையை அறுந்து விழ வைக்கும், அபசகுனமாக தோன்றும்,இதை தடுக்கவே நான் சுமார் 10 108 மணிகள் கொண்ட மாலைகளை பல்லாவரம் நரிக்குறவர் காலனியில் தந்து செப்பு கம்பி வைத்து கட்டினேன், ஒருமாலைக்கு 300₹ ஆனது., செப்பு கம்பி ஆதலால் உறுதியானது, அறுந்து விழாது, ஆனால் எறும்பு வரவே செய்யும், எனவே வருடத்துக்கு ஒரு முறை இப்படி வேப்பெண்ணெய் காப்பு செய்கிறேன், இது மாலைகளுக்கு மிகுந்த பளபளப்பை தரும்,இரண்டு நாள் ஊறினால் போதும்.
இந்த ஊறவைத்த எண்ணெயை செடிகளுக்கு பூச்சிக் கொல்லியாக பயன்படுத்துகிறோம்.
தாமரை மணி மாலை பெருமாளுக்கு, லட்சுமிக்கு, அம்பாளுக்கு, மஹாமேருவுக்கு சாற்ற மிகவும் உகந்தது, பல பல நன்மைகள் தரும், வாஸ்து தோஷம் நீக்கும், வீட்டில் தெய்வீகம் கமழும்.
எனவே தாமரை மணி மாலை வாங்குபவர்கள் செப்பு கம்பியில் கட்டியது மட்டும் வாங்கவும், நூலில் கட்டியது, S.S.கம்பியில் கட்டியது வாங்க வேண்டாம்.