என் மகளுக்கு +2 , english core பாடப்புத்தகத்தில் எழுத்தாளர் அசோகமித்ரனின் poets and pancakes என்ற கதை ஆறாம் பாடமாக வருகிறது, மகள் அத்தனை அழகாக இந்த கதையின் உள்ளடக்கத்தை எனக்கு விவரித்தாள்,
இந்த தலைப்பான poets and pancakes பின்னணி சுவையானது, ஜெமினி ஸ்டுடியோவில் இருந்த கம்பெனி ஒப்பனைக்கலைஞர்களையும் அங்கே கதை இலாகாவில் இருந்த கம்பெனி கவிஞர்களையும் இந்த கதையின் தலைப்பு குறிக்கிறது,
Pankcakes என்ற ஐரோப்பிய மேக்கப் ப்ராண்ட் மிகவும் பிரபலமானது, அதை எல்லா நடிகர்களின் கன்னங்களிலும் வரட்டி தட்டுவது போல அப்பியிருக்கின்றனர், அதற்காக இந்த மேக்கப் சாதனத்தை கிலோ கணக்கில் carton களில் வாங்கியிருக்கின்றனர் நிர்வாகத்தார்.
கம்பெனி திவாலாகி அத்தனை பேருக்கும் வேலை இழக்கையில் கம்பெனி கவிஞர்கள் சுமார் ஒரு டஜன் பேருக்கும் வேலை போனதை கூட வேடிக்கையாக பகிர்கிறார்.
இந்த கதை முழுக்க woven details, சிரித்து சாகும் படி விரிகிறது சம்பவங்கள்.
ஜெமினி ஸ்டுடியோஸ் 1940ஆம் ஆண்டில் இருந்து ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. அதன் நிறுவனர், புத்திசாலித்தனமான பன்முகத் தொழிலதிபர் எஸ்.எஸ்.வாசன் மிகவும் பலவீனமான மற்றும் கணிக்க முடியாத திரைப்பட வணிகத்திற்கு பெரும் பொருள் செலவிட்டார், படைப்பில் தரம் கொண்டு வர மெனக்கெட்டார். சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் ஜெமினி ஸ்டுடியோவில் 1952 முதல் 1966 வரை பணியாற்றியவர். அசோகமித்திரன் திரைப்படத்துறையை துறந்து முழு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, கவிஞர்-எடிட்டர் பிரிதிஷ் நந்தி அவரது ஜெமினி ஸ்டுடியோ உடனான நினைவுகளைப் பதிவு செய்யும்படி அவரை தொடர்ந்து வலியுருத்தினார்,அந்த பின்னணியில் நமக்கு கிடைத்த சுவையான சிறுகதை இது.
இதை ஆங்கிலத்தில் my years with boss at gemini studios என்ற புத்தகமாகவும் எழுதி வெளியிட்டுள்ளார் எழுத்தாளர்.