தமிழ் சினிமா எடிட்டர்களில் மிகவும் பெயரெடுத்த எடிட்டர்களான B.லெனின் ,V.T.விஜயன் ,மற்றும் அவரது உதவியாளர்கள் , கரகாட்டக்காரன் படத்தின் titles ல் வரும் பாட்டாலே புத்தி சொன்னார் பாடலில் எடுத்த படம்.
எடிட்டர் லெனின் பெயருக்கு ஏற்ப அசல் கம்யூனிஸ்ட், மூத்த சினிமா இயக்குனர் பீம்சிங் அவர்களின் மகன், மூத்த ஒளிப்பதிவாளர் B.கண்ணன் அவர்களின் அண்ணன், மிக எளியவர், பாதசாரியாகவும், பேருந்திலும் பல இடங்களுக்கு போவார்,நல்ல கலைப்படங்களுக்கும் தனித்துவமான படங்களுக்கும் தனக்கு பிடித்தால் மட்டும் எடிட்டிங் செய்வார்.
V.T.விஜயன் அவர்கள் மிகுந்த சினிமா ரசனை கொண்டவர், கடும் உழைப்பாளி, நிறைய தரமான வணிகப்படங்களுக்கு ஆத்மார்த்தமாக எடிட்டிங் செய்துள்ளார்.படம் எங்கே lag ஆகிறது என்பதை கணித்து காட்சிகளை நறுக்கி எடிட் செய்வதில் இவர் ஜித்தர் என்பார்கள்.இருவரும் connoisseur of taste கொண்ட எடிட்டர்கள்,எடிட்டர்கள் யார் என்று மக்களை டைட்டில் உன்னிப்பாக பார்க்க வைத்தவர்கள்.
#B_லெனின்,#vt_விஜயன்