சில பெரிய கட்டிடங்கள் துரதிர்ஷ்ட வசமாக வேலை நின்று போய் பத்து இருபது வருடங்கள் கழித்து துவங்க திட்டமிடுவார்கள்,
அப்படிப்பட்ட கட்டிடங்களை உடனே துவங்கி விடக்கூடாது,அதன் அஸ்திவாரம் துவங்கி மேற்கூரை வரை வலு இழந்திருக்கும், அக்கட்டிடத்தை முறையாக qualified structural engineer அமர்த்தி structural retro fitting design செய்து இப்படி படத்தில் உள்ளவாறு புனரமைக்க வேண்டும்,
பழைய காங்க்ரீட் columns ,footing, beam,staircase waist slab, basement raft slab ன் மீது பகுதி உடைத்து அல்லது புள்ளி போட்டு கம்பிகள் அமைத்து மீண்டும் காங்க்ரீட் இட்டு வலு கூட்டுவது அவசியம்.
இது நச்சுபிடித்த வேலை ,செலவு பிடிக்கும் என்றாலும்,கட்டிடத்தை முழுதும் உடைத்து அகற்ற மனமில்லாத உரிமையாளர்களுக்கு ஏற்ற முறை, கடந்த வருடம் வங்காள தேசத்தின் டாக்கா நகரின் மத்தியில் உள்ள ஒரு பழைய உளுத்துப் போன 20 மாடிக் கட்டிடத்தை இம்முறையில் புதுப்பித்தோம்.புதிய கட்டிடம் கட்டுவதை விட சவாலான பணி அது.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339