கலைஞனின் வறுமை மிகவும் கொடியது, அதுவும் சக கலைஞர்களின் பாராமுகம் மிகவும் கொடியது, "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது மிகவும் அர்த்தமுள்ள பழமொழி, நடிகர் வடிவேலு வருமானம் வருகையில் அதை அழகாக சேமித்ததால், முதலீடு செய்து பெருக்கியதால் இத்தனை வருடங்கள் படங்களே இன்றி இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழ முடிகிறது, கலைஞர்கள் கலைஞர்கள் அல்லாதவர்கள் அனைவருக்கும் ஒன்று சொல்கிறேன் "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்." செய்யும் வேலைக்கு சம்பளம் கேட்டு பெறுங்கள், அந்த சம்பளத்தில் எதிர்காலத்துக்கு சேமியுங்கள்.
சினிமா போரடிக்காமல் இருந்த செலுலாய்ட் கால இயக்குனர்களுக்கே இந்த கதி என்றால் டிஜிட்டல் காலத்தில் இருக்கும் போட்டியை எதிர்கால பயத்தை சொல்ல வேண்டியதில்லை.
இயக்குனர் எம்.தியாகராஜன் Bsc.DFT அவர்களுக்கு நேர்ந்த இந்த பாராநிலை யாருக்கும் இனி வராதிருக்கட்டும்.
துவக்க 90 களின் சினிமாவில் ரசிகர்களை மகிழ்வித்த இயக்குனர் எம்.தியாகராஜன் Bsc.DFT அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
PS: பொண்ணு பாக்க போறேன் இயக்கம் முருகேஷ் என்று உள்ளது, அதை இவர் இயக்கியதாக பெட்டி செய்தி உள்ளது.