எங்கள் வீட்டில் atomberg renessa Brushless Direct Current. மின்விசிறியில் ஒன்றின் காற்று சுழலும் வேகம் ஆறாம் நிலையில் இருந்து மூன்றாம் நிலைக்கு இறங்கியபடி இருக்க, புகார் செய்ததும் மறுநாளே வந்து சென்சார் மாற்றிச் சென்றார், இருந்தும் அதே பிரச்சனை நிகழ, புகார் செய்ததும் மறுநாளே அவர் தயங்காமல் சுணங்காமல் புதிய மோட்டார் முன்பதிவு செய்து விட்டார், அது வீட்டுக்கு வந்தவுடன் நான் போன் செய்து சொல்ல, உடனே வந்து புதிய மோட்டாரை பொருத்தி தந்துவிட்டுச் சென்றார்,3 வருட உத்திரவாத காலத்தில் இவற்றை மாற்றியதால் இந்த சேவை எதற்கும் எதற்கும் கட்டணமில்லை.
இது போல வேறு எந்த புராதான மின்விசிறி நிறுவனங்களில் செய்தது இல்லை, எனவே தான் என் வாடிக்கையாளர்களுக்கு atomberg bldc மின்விசிறிகளை மட்டும் பரிந்துரைக்கிறேன், 28w மட்டும் கோருவதால் சிறந்த மின்சார சிக்கனம் இருக்கும், இவர்களின் support after sales போல எந்த புதிய நிறுவனமும் கடைபிடித்தால் இந்திய சந்தையில் பெரிய இடத்துக்கு வரலாம்,
இந்தியாவில் bldc fan தயாரிப்பாளரான super fan அதன் வாடிக்கையாளர் சேவையில் குறை வைத்து விடுவர், அதனால் நிறைய வாடிக்கையாளர்கள் atomberg மின்விசிறிக்கு மாறியதை அறிவேன்.
இன்றைய விலைவாசியில் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தின் மின்கட்டணம் குறைப்பதற்கு சிறந்த வழி உங்கள் பழைய 60w மின்விசிறிகளை புறக்கணித்து bldc தொழிற்நுட்பத்தில் இயங்கும் 28w மின்விசிறிகளுக்கு மாறுவதாகும்.
இது குறித்த முந்தைய பதிவுகள்