படத்தில் உள்ளது பக்கத்து பெட்டிக்கடையில் கிடைக்கும் புதிய லாகிரி வஸ்துவான cool lip என்பதாகும், 12 ன் விலை 50₹.
சமீபத்தில் சென்னை உலகசினிமா திருவிழாவில் சத்யம் தியேட்டர் கழிவறைகளில் urinals முழுக்க இந்த உறிஞ்சி ஊற வைத்து எறிந்த cool lip தலையணை பைகளால் நிரம்பியிருந்ததைப் பார்த்தேன்.
கல்லூரி மாணவர்கள் ஏனையோர் இந்த கொடூரமான வாழ்க்கையையே புரட்டி போடும் லாகிரி வஸ்துவிற்கு தம்மை ஒப்புத் தந்துவிட்டதைப் பார்த்தேன், நாக்கின் அடியில் இந்த தலையணையை வைத்து ஊற வைத்தபடியே வகுப்புகளை கவனிக்க ஏதுவாக உள்ளது, காறித் துப்ப வேண்டாதது வேறு வசதியாக உள்ளது.
இது சிறார்களுக்கு தரும் கிளர்ச்சி படு பயங்கரமானது, பள்ளி மாணவர்கள் இதை உட்கொண்டபடி பாடம் நடத்தும் ஆசிரியையை பார்த்தால் என்ன ஆகும் என இதை விற்கும் மனசாட்சியற்ற பெட்டிக்கடைக்காரர்கள் யோசிக்க வேண்டும்.
குட்காவை ஒழித்திருக்கிறோம், ஹான்ஸை ஒழித்திருக்கிறோம் என்று புதிய வடிவத்தில் மவுத் ஃப்ரெஷ்னர் என்ற விஷமமான பெயரில் இந்த கூல் லிப்பை கடைகளில் சாதாரணமாக விற்கின்றனர்.
அரசு இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், இன்று காலை தன் தந்தையின் வண்டியை ஓட்டி வந்த சிறுவன் பெட்டிக்கடையில் தைரியமாக கூல் லிப் தாங்க என கேட்பதைப் பார்க்கையில் கதிகலங்கியது.
எங்கள் தலைமுறை சிகரட்டால், பான்பராக்,மாணிக்சந்தால்,குடியால் நாசமானது என்றால் இந்த தலைமுறை cool lip ஆல் நாசமாகிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.
உங்கள் வீட்டில் மகன் , மகள் இருந்தால் அவர்களுக்கு தெரியாமல் கவனியுங்கள், இந்த tea bag போன்ற பையில் இருந்து வரும் சாறு கெட்ட நாற்றம் தராததால் ஐயம் வராது, வாயில் chewing gum என்று சொல்லி இயல்பாக கடந்து போகக் கூடும், group study மற்றும் பிரியாணி விருந்து, திருமண விருந்துகளில் இளைஞர்களின் இலைகளில் இந்த cool lip பரிமாறப்பட்டு புரிஞ்சவன் பிஸ்தா என fb reels ல் காணொளி விட்டதை பார்த்தேன்,
இந்த போதை பழகி முற்றினால் மாணவர்களை இதைவிட வீர்யமுள்ள போதைக்கு தேடிப் போக வழிவகுக்கும்.
விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் சொன்னது போல drug free society க்கு நாம் ஒவ்வொருவரும் போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஆபத்தான போக்கு இது என பெற்றோர் நாம் அறிவோம்.
அரசு பள்ளிகள் அருகில் பல பெட்டிக்கடைகளில் போதை பொருள் விற்பனை செய்வது கண்கூடு.
மாணவர்கள் வகுப்பு நேரத்திலும் கூட நாக்கின் கீழ் கூல் லிப் வைத்திருக்கிறார்கள் என்று என் உறவினர்களில் உள்ள ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
கூல் லிப் லேசான கிளர்ச்சியான போதையைத் தந்து மாணவர்களை மந்தமாக்கிவிடுகிறது, வகுப்பில் மாணவர்கள் மயக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள், இது வாயில் வைத்து இருந்தால் தான் சில மாணவர்களுக்கு காலை கடன் முடிக்க முடிகிறது.
இதுபோன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெட்டிக் கடைகள் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவற்றை அகற்றலாம்
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள் பலர் easy money க்கு வேண்டி லேசானது முதல் வீர்யமான போதைப் பொருட்களை விற்பனை செய்வது சாதாரண காட்சி.
அரசு நடத்தும் ஹெல்ப்லைனுக்கு மட்டும் போதை மறுவாழ்வு உதவி கோரி மாதம் 80 அழைப்புகளுக்கு மேல் வருகின்றன, எனவே
ஒவ்வொருவரும் பிள்ளைகளை அவர்கள் கண்காணிக்கப்படுவது அறியாமல் கண்காணிப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
அரசு இரும்புக்கரம் கொண்டு உடனே இந்த கூல் லிப் இழிபிறவி விற்பனையாளர்களை ஒடுக்க வேண்டும்,உடன் ஆன்லைன் மைக்ரோ ஃபைனான்ஸ், ஆன்லைன் ரம்மி இவற்றையும் ஒழிக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.
இந்த கூல் லிப் ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை கமெண்டில் உள்ள லிங்கில் காணொளியில் பாருங்கள்.
ஒரு மாணவன் சொல்கிறான்
கூல் லிப் இல்லைன்னா நாங்க செத்ருவம் தல
மற்றொரு மாணவன் சொல்கிறான்
கூல் லிப் இல்லைன்னா எனக்கு தூக்கம் வராது தல
மற்றொரு மாணவன் சொல்கிறான்
கூல் லிப் இருந்தா தான் காலைல மோஷன் ஃப்ரீயா போகும்.
மற்றொரு மாணவன் சொல்கிறான்
கூல் லிப் வச்சிட்டு படுத்தா தான் நைட்ல தூக்கம் வரும்.
மற்றொரு மாணவன் சொல்கிறான்
கூல் லிப் வச்சிட்டு பொண்ணைப் பாத்தால் மஜா தான்.
மற்ற சில மாணவர்கள் சொல்கின்றனர்,
கூல் லிப் ban பண்ணவனை அடிப்போம், இதோ இதால அடிப்போம்,இந்த 90₹ செருப்புலயே தலையில் அடிப்போம் என செருப்பை தூக்கி காட்டுகின்றனர்.
மற்றொரு மாணவன் சொல்கிறான்
தலைகாணி ஒன்னை வாய்ல வச்சிட்டு ஓரு பொண்ணை பார்த்தால் முடிஞ்சது (தன் போனை காட்டுகிறான்)அது ஒரு சோக்கு