ஸ்ரீ பெரும்புதூர் ராஜீவ் நினைவகம் architect & urban designer K.T.ரவீந்திரன் அவர்களால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு 2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, இவர் கேரளத்தின் தலச்சேரியை சேர்ந்தவர், புது டெல்லியின் பெருமைமிகு school of planning and architecture துறையின் முன்னாள் தலைவர் இவர், இவர் மனைவி அம்பா சான்யால் பழம்பெரும் பெருமைமிகு theatre artist ஆவார்.
இந்த நினைவகம் முழுக்க பல குறியீடுகளை (symbolism ) தன்னகத்தே கொண்டுள்ளது, இந்த நினைவகத்தின முக்கியமான focal point என்றால் இந்த வெள்ளைக் கல் மேடையில் சுயம்பு போல மேலெழுந்த இந்த சிறிய செம்மைநிறக் கல் தான்.
இந்த வெள்ளைக்கல் மேடை இருக்கும் இடத்தில் தான் ராஜீவ் கடைசியாக நின்றார்,அண்ணல் காந்தி பற்றிய கவிதை கேட்டார் , கவிதை சொன்ன சிறுமியை பாராட்டி தட்டித் தந்தார் , அதன் பின் பனைமரம் உயரத்துக்கு எழும்பிய நெருப்புக்கோளம்,
அந்த செம்மைநிறக் கல் (bloodstone, Jasper stone ) பதித்த இடத்தில் தான் அவர் தலைகுப்புற உயிர்நீத்திருந்தார்.
அந்த கல்லை அருகில் நின்று பார்க்கும் யாரும் ஒரு துளி கண்ணீரேனும் உகுப்பர்.
இந்த நினைவக வளாகத்தில் முன்பு பனைமரக்காடு , அதில் வரலாற்றுப் பழமை மாறாமல் நடந்த வரலாற்றுக்கு சாட்சியாக உள்ளது அந்த அல்லிக்குளமும் கூட
#ராஜீவ்_நினைவகம்