புதிய பாதை திரைப்படத்தின் இறுதிக்காட்சி அழகானது,வினை விதைத்தவன் வினை அறுப்பான் என சொல்லுவது, சீதாராமன் (பார்த்திபன்) தொகுதி என்றழைக்கப்படும் நாசரை தன் மனைவியை குண்டு வைத்துக் கொன்றதற்காக கடப்பாறையை இறக்கி கொல்ல எத்தனிக்கையில், குழந்தையின் அழுகுரல் கேட்கும், அங்கே அடுத்தடுத்த பின்விளைவுகள் மனதில் படமாக விரியும்,
கடப்பாறையை கீழே போட்டுவிட்டு தன் கையாள் சிறுவனிடமிருந்து குழந்தையை வாங்கி நடப்பார், தொகுதி கடப்பாறையை எடுத்து இவரை குத்தவர, சென்னையின் புகழ்பெற்ற பிரேக் பிடிக்காத லாரி தொகுதியை அடித்து தூக்கிவிடும், கடப்பாறை அந்தரத்தில் பறக்கும்.
தொகுதி நாசருக்கு குதிரையை இலச்சினையாக வைத்திருந்தார் பார்த்திபன், அவர் கட்சி அலுவலகம், வாகனம், கீசெயின்,கழுத்து சங்கிலி பென்டண்ட் என அனைத்திலும் குதிரை இலச்சினை காணலாம்,மேசை அலங்காரப்பொருளாக ஒரு ஆடும் தங்க குதிரை ,ஒரு கதாபாத்திரத்திற்கு அழுத்தம் நம்பகத்தன்மை தர அதற்கு details எழுதவேண்டும் என்ற பாடம் இதில் திரைப்பட மாணவர்களுக்கு உண்டு, இத்தனை உழைப்பு இருந்ததால் தான் நீண்ட தாமதம், தடையை மீறி புதிய பாதை வெளியாகி இன்றும் பேசப்படுகிறது.
இந்த காட்சியை பெசண்ட் நகரில் புகழ்பெற்ற கோஸீ cozee உணவகம் முன்பு படமாக்கியிருந்தார் இயக்குனர் பார்த்திபன்,
இன்றைய கோஸீ cozee உணவகம் இணைப்பு படங்களில் பாருங்கள்.