நேற்று தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் பேட்டியைப் பார்த்தேன் ,அணையப் போகும் விளக்கை கவிஞர் வாலி அவர்கள் தூண்டிவிட்டு ஏற்றினார் என்று தான் சொல்ல வேண்டும் என்றார் தேவா , மனசுக்கேத்த மகராசா படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.சாந்திலால் நஹார் இவரை ஒப்பந்தம் செய்யாமல் முகம் தராமல் மறுதலித்துக்கொண்டே இருக்கிறார்,
அவர் மகன் சிறுவன் இவர் ஆர்மோனியத்தை நோண்டியும், தபலாவை நொட்டியும் சேட்டை செய்ய, இவர் அதையும் பாராட்டி, நல்ல குரு கிடைத்தால் ,பையன் டாப்பாக வருவார் என்று சோப் வேறு போடுகிறார்,அவர் அப்போதும் ரசிக்கவில்லை, வாலி அவர்கள் வந்ததும் ,ஏதோ மெட்டு போட்டிருக்கார் என்று அலுப்பும் காட்டுகிறார்,