" சார் குறட்டை விடாதீங்க"
" சார் கால் ஆட்டாதீங்க"
"சார் போன் பேசாதீங்க"
" சார் போனை சைலண்ட்ல போடுங்க"
"சார் தலை குனிந்து நடந்து போங்க"
" பேசாதீங்க ப்ளீஸ்" (இளம் ஜோடிகளை பார்த்து சொன்னது )
இவை எல்லாம் நான் இன்று மட்டும் படம் பார்க்கையில் வேண்டிக் கேட்டவை,
கால் ஆட்டினால் ஒரு row முழுக்க அதிரும் என்ற யோசனை கூட இன்றி கால் ஆட்டுகின்றனர்,இளம் நரம்புத் தளர்ச்சிக்காரர்கள் நிறைய பேருக்கு கால் ஆட்டும் பழக்கம் உள்ளது.
அரைமணிநேரம் வரிசையில் நின்று சீட்பிடித்து அமர்ந்து படம் மெதுவாக இருந்தால் குறட்டை விட்டு தூங்குகின்றனர், அல்லது காலை மிதித்தபடி வெளியே எழுந்து போகின்றனர்,உலக சினிமாவில் சப்டைட்டில் படிக்காமல் விட்டு விட்டால் nuances புரியாது, நகைச்சுவை புரியாது என்று உணராமல் தொடர்ந்து மேலே எழுதியதையும் இதைவிட அதிகமாகவும் சேட்டைகள் செய்கின்றனர்.
நான் இன்று சத்யமில் வாகனம் நிறுத்துகையில் மணி 3-30, six degrees ல் நுழைந்து திரையில் ஓடிக்கொண்டிருந்த Godard ன் Pierrot le Fou 1965 ஃப்ரெஞ்ச் திரைப்படத்தில் அசையாமல் மூழ்கி விட்டேன், ஏற்கனவே பார்த்த படம் என்றாலும் ஒரு auteur படைப்பை திரையில் பார்க்க வேண்டும் என இயக்குனர் பெயர் வரும் வரை நின்று பார்த்து கைதட்டிவிட்டு, மேல் தளத்தில் serene ல் நுழைந்தேன், the story teller இந்தியில் ஓடியது,திரையில் பரேஷ் ராவலை கண்டதும் குதூகலமாகி, தலை குனிந்து கூன் இட்டு budget இருக்கையில் முன்னே சென்று அமர்ந்து அண்ணாந்து படம் பார்த்தேன், பின் வரிசையில் சிலர் எழுந்து போக அங்கே சென்று அமர்ந்து படத்தை முழுதும் பார்த்தேன், இயக்குனர் பெயர் வரும் வரை நின்று கைதட்டி விட்டு மீண்டும் அதே serene க்கு the night of the 12 th ஃப்ரெஞ்ச் படத்திற்கு வரிசையில் நின்று முழுப்படம் பார்த்து முடித்து விட்டு முதல் ஆறாக வெளியே வந்து வண்டி எடுத்து வீட்டுக்கு சரியாக 9-00 மணிக்கு வந்துவிட்டேன்.