இது சைதாப்பேட்டை GST சாலையில் உள்ள நந்தனம் கால்நடை மருத்துவ நிலையம், இதன் அழகிய பெயர்பலகையின் graphics design அபாரமானது, நான் 1996 ஆம் ஆண்டில் இருந்து இந்த தனித்துவமான எளிமையான freehand lettering பாணி graphics design font ஐ பேருந்தில் போகையில் தன்னிச்சையாக திரும்பி பார்ப்பேன், எந்த ஒரு வடிவமைப்பின் வெற்றியே அது தான், கவன ஈர்ப்பு.
பல்வேறு காலகட்டங்களில் இக்கட்டிடம் வெள்ளை அடிக்காமல் மஞ்சள் இறங்கி இருந்தாலும் இந்த பெயர் பலகையின் மாற்று குறைந்ததில்லை.
எத்தனை அழகாக இதை வடிவமைத்து கைப்பிடி சுவற்றில் சரியான உயரத்தில் சரியான தடிமனில் ,சரியான width factor தந்து பொறித்துள்ளனர் , இது கண்டிப்பாக சென்னை கவின்கலை ஆசிரியர்கள் , மாணவர்கள் செய்த பணியாகத் தான் இருக்கும், இதை 1950 ஆம் ஆண்டில் துல்லியமான
shop drawing வரைந்து அங்கே நிறுவியுள்ளனர்,இது தான் உணர்ந்து செய்யும் வடிவமைப்பு.