தமிழ் சினிமாவின் கோரங்களில் ஒன்று நல்ல திறமை மிகுந்த நடிகர்களை மறந்து போய் விடுவது, கண்டு கொள்ளாமல் விடுவது.
அப்படி கண்டு கொள்ளாமல் போய் முகவரி தொலைந்த நடிகர் சதீஷ், ஆமாம் இவர் பெயர் சதீஷ் தான்.
இவர் நடித்த மூன்று முக்கிய படங்களும் கதைக்கும், வசனங்களுக்கும் இயக்கத்துக்கும் அப்படி பேசப்பட்டன, இவர் ஒன்றும் fluke ல் cast ஆக வில்லை, இவர் இயக்குனர் தங்கர் பச்சான் திரைப்படங்கள் மூன்றில் செய்த கதாபாத்திரங்கள் காலத்துக்கும் பேசப்படும்.
அழகி திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனின் சிறு வயது கதாபாத்திரம் அத்தனை சிறப்பாக செய்தார் சதீஷ், இவரின் நடிப்பின் அருமையை அறிய இரவின் நிழல் படத்தில் பார்த்திபனின் இளம் வயது கதாபாத்திரத்தை ஒருவர் பார்த்தால் அந்த வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
நம் ஒவ்வொருவர் மனதுக்கும் அத்தனை நெருக்கம் அந்த ஒளியிலே தெரிவது தேவதையா பாடல்,இசைஞானியின் அந்த பாடலை சதீஷுக்கு தந்தார்
இயக்குனர் தங்கர் பச்சான் .
ஒம்பது ரூபா நோட்டு திரைப்படத்தில் பலவருடங்கள் கழித்து ஊருக்கு திரும்ப பேருந்து ஏறி பணம் இல்லாததால் பேருந்தில் இருந்து நடத்துனரால் இறக்கி விடப்படும் மாதவரை கைப்பிடித்து பேருந்தில் ஏற்றி பயணசீட்டு எடுத்து ,வழியில் உணவு வாங்கித்தந்து, பழங்கதைகள் பேசி, இரவு தன் வீட்டுக்கு அழைத்துப்போய் உணவு தந்து தங்க வைக்கும் சிகாமணி என்ற இளைஞன் கதாபாத்திரத்தை அத்தனை அழகாக செய்தார் சதீஷ்.
சொல்ல மறந்த கதையில் நடிகர் சேரனின் பாசமிகு தம்பி, வீட்டோடு மாப்பிள்ளை ஆகிவிட்ட அண்ணனைப் பார்க்க தயங்கி தயங்கி சிதம்பரம் வந்து குசலம் சொல்லுவார், அண்ணன் ஹோட்டல் உணவு மேஜையில் சாப்பாடு பரிமாறி பக்கத்தில் நிற்பார், சாப்பிடுகையில்,இவர் சட்டை பேண்ட் எடுக்க ஆயிரம் ரூபாய் கணக்கரிடம் பணம் கடன் வாங்கி தம்பி சட்டை பையில் வைப்பார், தம்பி அணிந்து தேய்ந்து பள்ளம் விழுந்த ரப்பர் செருப்பை லாவகமாக அணிந்து தன் புதிய பாட்டா தோல் செருப்பை தம்பி காலடியில் விடுவார் சேரன், அண்ணன் வீட்டோடு மாப்பிள்ளையாக அவமானப்படுகையில் துடித்து அத்தனை உள்ளம் நோவார்,வீட்டில் வந்து சேதி சொல்கையில் அப்படி கேவி அழுவார், பிரிந்த அண்ணனும் அண்ணியும் சேர்வதற்காக அப்படி உருகுவார் சதீஷ் ,
வேறு படங்களும் கூட நடிகர் சதீஷ் நடித்திருக்கலாம், எனக்கு உடனே நினைவு வரவில்லை, உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும், எப்போது மீள் பார்வை பார்த்தாலும் நிறைவான நடிப்பில் நின்று விடுவார் நடிகர் சதீஷ்,
நுங்கம்பாக்கம் அரசுப்பள்ளி மாணவரை தங்கர்பச்சான் நேரில் சென்று அழகி புதுமுகத் தேர்வுக்கு தேடி கண்டுபிடித்து நடிக்க வைத்து தொடர்ந்து அடுத்த இரண்டு படங்களிலும் நடிக்க வைத்துள்ளார்.
நடிகர் சதீஷ்ஷின் பேட்டி லிங்க் கமெண்டில் பாருங்கள்,நன்றாக பாடுகிறார் சதீஷ் ,புதிய இயக்குனர்கள் அவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பலருக்கு இவர் பெயர் சதீஷ் என்பதே தெரியாது, ஏற்கனவே அண்ணாத்தே காமெடி புகழ் நடிகர் சதீஷ் இருப்பதால் விக்கிபீடியா, imdb என அவரின் முகம் தான் வருகிறது , இவர் தன் பெயரை அழகி சதீஷ் என அடைமொழி வைத்துக் கொண்டு நடித்தால் பலருக்கும் உடனே தெரியும்,'நிழல்கள் ரவி' என்ற அடைமொழி போல 'அழகி' சதீஷ் நல்ல ஏற்றம் தரும்.
Sathish Stephen என்ற பெயரில் fb ல் உள்ளார்
இதே போல கண்டுகொள்ளாமல் போன நடிகர் தென்னவன் பற்றி முன்பு எழுதியது.