மலையாளக் கவி பிச்சு திருமலா பாடல்கள் அசாதாரணமான கவித்துவம் மிக்க வரிகள் கொண்டவை, ஷ்யாம் மாஸ்டர் தனித்துவம் மிக்க புதிய இசையை தன் பாடல்களில் பரீட்சித்துப் பார்த்தவர், அவரின் அமரத்துவம் பெற்ற பாடல்கள் எண்ணிலடங்கா, மலையாளத்தில் இந்த மைநாகம் கடலில் நின்னுயருண்ணுவோ ? மிகவும் வரவேற்பைப் பெற்ற பாடல்.
நான் இந்த மைநாகத்தை மை = கருப்பு + நாகம் கருநாகம் என பொருள் கொண்டேன், இருந்தாலும் ஜானகியம்மாவின் இத்தனை அழகான பாடல் , என்ன கருநாகம் கடலில் இருந்து வளர்கிறதோ ? என பொருள் படிகிறதே ? என ஐயமுற்று, பல மலையாளிகளிடம் கேட்டேன்,
அவர்களால் இத்தனை அழகான , நுட்பமான பாடலின் வரிக்கு சரியான அர்த்தம் சொல்ல முடியவில்லை, நான் விடவில்லை, கூகிளில் என்ன தேடினாலும் மலையாள டிக்ஷனரியில் இந்த நேரடிப் பொருள் இல்லை, முயற்சியைக் கைவிடாமல் மைநாகம் என கூகுள் images ல் தேடினேன்,
விடை வந்தது, அது ஒரு myth மலையின் படம். ஓவியம், அதை தேடிப் போக, அது மைநாகன் என்ற பர்வதம் எனக் கண்டேன் , அதன் விக்கி பக்கம் இங்கே ,https://en.m.wikipedia.org/wiki/Mount_Mainak , இது தங்க மலையும் கூட, அதற்கு பறக்க சிறகுகளும் உண்டு, விரும்புகையில் வளரவும் தேயவும் முடியுமாம்.
மைநாகன் என்பவன் இராமாயண காலத்தில் மன்னன் ஹிமயனுக்கும் மேனகைக்கும் பிறந்த மகனாம், அவனின் சகோதரி பார்வதியாம், ஒரு சமயம் இந்திரனின் கடும் கோபத்திற்கு ஆளான மைநாகன் இந்திரனால் சிறகுகள் வெட்டப்பட்டான், உயிருக்கு அஞ்சி தென்னிலங்கை கடல் பகுதிக்குள் தலைமறைவானானாம்.
பின்னர் ஹனுமான் தயவால் மீண்டும் கடலில் இருந்து உயரே வளர்ந்தானாம்.
அந்த மைநாகம் தான் கடலில் நின்னுயருன்னுவோ ? என பிச்சு திருமலா கவி உத்தேஷிச்சது என அவசானம் தேடித் தெளிந்தேன், இந்த பாடல் தாசேட்டா பாடிய வடிவம்,
ஜானகியம்மா சோலோவில் அத்தனை லயித்து பாடியிருப்பார்கள், எத்தனை தாலாட்டும் அரவணைக்கும் ஒரு பாடல் , அதன் உடன் பயணிக்கும் இசை என காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு பாடல். இடம் பெற்ற படம் த்ருஷ்ணா , வெளியான வருடம் 1981, ஜானகியம்மா பாடிய வடிவம் கீழே காண்க, கரைந்து போவீராக.https://youtu.be/_0B72cx5_Co