சாஹேப் உத்தம் சிங் கொடுங்கோலன் ஜெனரல் ட்வையரை (Michael O'Dwyer ) சுட்டுக் கொன்ற நாள் 13 மார்ச் 1940.
முதலில் நாம் இரண்டு கயவர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
ஒருவன் பஞ்சாப் மாநில கவர்னர் ட்வையர் எ Michael O'Dwyer
மற்றொருவன் ஜெனரல் டயர் Reginald Edward Harry Dyer,
சாஹேப் உத்தம் சிங் கொடுங்கோலன் ஜெனரல் ட்வையரை மட்டுமே கொன்றார், ஜெனரல் டயர் தப்பிவிட்டான்.
ஏன் அந்த கொடுங்கோலன் ஜெனரல் ட்வையரை உத்தம் சிங் 21 வருடங்கள் காத்திருந்து கொல்ல வேண்டும்?
ஜாலியன் வாலாபாக் ஒரு முன்னோட்டம்.
தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 ஐ சீக்கியர்கள் ஒரு நாள் முன்பாக பைசாகிப் பண்டிகை எனக் கொண்டாடுவார்கள், 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் மக்களுக்கு அந்த பைசாகிப் பண்டிகை மிகுந்த துக்க தினமாக அமைந்தது,
அன்று மாலை சுமார் 5-30 மணிக்கு பைசாகிப் பண்டிகையைக் கொண்டாடவும் , அப்போது புதிதாக அமல்படுத்தப்பட்ட ரௌலட் சட்டம் என்ற கொடிய சட்டத்தை எதிர்த்தும் ஏற்பாடு செய்திருந்த சீக்கிய மதகுருமாரின் சுதந்திரப் போராட்ட பேச்சைக் கேட்கவும் ,பஞ்சாபில் வெள்ளையருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரப்படுத்தவும் சுற்றியுள்ள வெளியூர்களில் இருந்தெல்லாம் ஆயிரக்கணக்கில் ஆண்கள் , பெண்கள் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக ஜாலியன் வாலாபாக் திடலில் திரண்டனர்.
பல மக்களுக்கு அங்கே மாலை 6மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது தெரிந்திருக்கவில்லை, அங்கே சொற்பொழிவு துவங்கிய சற்று நேரத்தில் சுமார் ஜம்பது சிப்பாய்களுடன் ஆஜரான ஜெனரல் Dier தன் ரெஜிமென்டின் துப்பாக்கி குண்டுக் கையிருப்பான 1650 தீரும் வரை தொடர்ந்து சுட உத்தரவிட்டான்.
அந்த ஆறு ஏக்கர் பரந்த பெரிய மைதானத்தில் இருந்த கிணற்றில் உயிருக்குப் பயந்து பலர் குதித்து மடிந்தனர், இந்த துப்பாக்கிச் சூட்டில் 1000 பேர் கொல்லப்பட்டனர்,
1500 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை தீவிரமாக முடுக்கி விட்டதில் முக்கிய பங்கு வகித்தது,
இடது புறம் உள்ள படத்தில் இருப்பது ஜாலியன் வாலாபாக்கில் 1500 பொதுமக்களை சுட்டுக் கொலை செய்ய ஆணையிட்ட ஜெனரல் டயர் Reginald Edward Harry Dyer,
வலப்பக்கம் இருப்பது Dierக்கு கடைசி வரை பக்க பலமாக இருந்த அன்றைய பஞ்சாப் மாநில கவர்னர் ட்வையர் எ Michael O'Dwyer
கீழே படத்தில் இருப்பது சாஹேப் உத்தம் சிங், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான புரட்சி வீரன், ஜாலியன் வாலாபாக் படுகொலை நடக்கையில் இவருக்கு 20 வயது, இவர் 21 ஆண்டுகள் காத்திருந்து ட்வையரை லண்டனில் ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்து13 March 1940 அன்று சுட்டுக் கொன்றார்.
சுட்டவுடன் தப்பி ஓடவில்லை, இந்தக் கயவனை கொன்றதன் மூலம் என் மண்ணைப் பெருமைப் படுத்தியிருக்கிறேன் , இதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்றார் உத்தம் சிங்,
அடுத்து வந்த 42 நாட்கள் கடும் உண்ணாவிரதம் இருந்தவர், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பரெஸ்டன்வில் சிறையில் 31 July 1940 அன்று தூக்கிலிடப்பட்டார்.இவரது நினைவு நாள் பஞ்சாபில் விடுமுறை நாளாகும்.
உத்தம் சிங்கால் 21 வருடக் காத்திருப்புக்குப் பின்னர். அன்று எய்தவனான Michael O Dwyer ஐ பழி தீர்க்க முடிந்தது, அம்பான ஜெனரல் டயர் முன்பே July 23, 1927 ஆம் ஆண்டு இறந்து விட்டதால் , அவன் கதை உத்தம் சிங்கால் முடிக்கப்படவில்லை.
படுகொலை சம்பவத்துக்குப் பின் கலொனலாக பதவி இறக்கம் பெற்ற ஜெனரல் டயர், இங்கே இந்தியாவிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு இங்கிலாந்து சென்றவன் இங்கிலாந்திலும் புறக்கணிக்கப்பட்டு,பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டவன், தன் 62 ஆம் வயதில் நோய்முற்றி இங்கிலாந்தில் சாமர்செட் என்ற ஊரில் 23 ஜூலை , 1927 ஆம் ஆண்டு மரணமடைந்துள்ளான்,
இவனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்ற சாபம் ஜெனரல் Dyer விஷயத்தில் ஏனோ பலிக்கவேயில்லை.மக்களைக் கொடூரமாக கொலை செய்த மனித மிருகங்களுக்கு சாதாரண சாவு கிடைப்பது வினோதம் தான்.
உத்தம் சிங் அந்த 21 வருட காத்திருப்பு காலத்தில் ஜெனரல் டயரை தேடிச் செல்லாதது ஏன் என விளங்கவில்லை.
#உத்தம்சிங்