தில்லியில் புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு வேண்டி இடித்து தரைமட்டமாக்கப்பட இருக்கும் பத்து புராதான பெருமை மிகுந்த அரசுக் கட்டிடங்கள்.
வேலையில்லாத நாவிதன் பூனையை சரைத்த கதைதான் நினைவுக்கு வருகிறது, இக்கட்டிடங்கள் ஒவ்வொன்றுமே சுதந்திர இந்தியாவின் பெருமை பேசுபவை.
இந்த சம்மட்டி ஏந்திய காட்டுமிராண்டிகளிடம் இருந்து புராதான சின்னங்கள் காக்கப்பட வேண்டும், பசுமை தீர்ப்பாயம் தலையிட்டு இதற்கு நல்ல முடிவெட்ட வேண்டும்,உச்ச நீதிமன்றம் மௌனம் கலைத்து தன்னிலை தெளிந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.
ஃப்ரெண்ட்ஸ் படத்தில் பழமையான grand father கடிகாரம் விழுந்து நொறுங்குகையில், ராதாரவி வடிவேலுவிடம் அது எவ்வளவு பழசு தெரியுமாடா? என்பார்,அதற்கு வடிவேலு ,அப்பா நான்கூட புதுசோன்னு நெனச்சு பயந்துட்டேன்யா என்பார், அப்படிப்பட்ட கோமாளிகளுக்கு புராதானம் பழமை என்றால் என்ன என்று தெரியும்?
#தில்லி_புராதான_கட்டிடங்கள்_இடிப்பு,#ஃபர்னீசர்_உடைப்பு